மிகச் சிறந்த ஜனாதிபதி வேட்பாளர் பேராயர்! (சிறப்புக் கட்டுரை) - Sri Lanka Muslim

மிகச் சிறந்த ஜனாதிபதி வேட்பாளர் பேராயர்! (சிறப்புக் கட்டுரை)

Contributors
author image

நஜீப் பின் கபூர்

முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு நெருக்கடி
தேர்தல் முடிவுகளை ஈஸ்டர் நிகழ்வுகள் மாற்றும்


சுதந்திரத்திற்குப் பின் நடந்த தேர்தல்களில் அரசியல் ஆதிக்கப்பேட்டி துவக்க காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடதுசாரிகளுக்குமிடையில் என்று அமைந்திருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பண்டாரநாயக்க பிரிந்து சுதந்திரக் கட்சியை நிறுவியபோது இந்த அதிகாரப் போட்டி ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையே என்று சென்று கொண்டிருந்தது.

ஏறக்குறைய 60 வருடங்கள் இப்படிப்போய் கொண்டிருந்த இந்த ஆதிக்கப் போட்டி அண்மையில் 2018 உள்ளாட்சி தேர்தல் வரை நீடித்துச் சென்றது. சுதந்திரத்தின்பின் அதிக காலம் இந்த நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி என்ற பெருமை சுதந்திரக் கட்சியைச் சாரும். இரண்டாம் இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இருந்து வருகின்றது.

இப்படி சுதந்;திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மாறி மாறி அதிகாரத்தில் அமர்ந்தாலும் அனேகமான சந்தர்ப்பங்களில் சிறு கட்சிகள் இவை அதிகாரத்தை முன்னெடுத்துச் செல்ல பக்க துனைக்கு இருக்க வேண்டி வந்திருக்கின்றது.

2018 ல் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலுடன் மீண்டும் இந்த அதிக்கப் போட்டி கைமாறி இருக்கின்றது என்பது எமது கருத்து. எதிர் காலத்தில் நடக்கின்ற எந்தத் தேர்தலானாலும் அது ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ராஜபக்ஷாக்களின் கட்டுபாட்டிலிருக்கின்ற ஸ்ரீ லங்கா பொதுசன முன்னணிக்கும் என்றே இருக்கும் என்பது எமது கருத்து. பிரதான கட்சி என்ற நிலையிலிருந்து சுதந்திரக் கட்சி பின்னடைவை எதிர்நோக்கி இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

எனவே வருகின்ற எந்தத் தேர்தலானாலும் அது ஸ்ரீ லங்கா பொதுசன முன்னணிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அணிகளுக்கிடையிலானதாகத்தான் இருக்கும். ஏனைய கட்சிகள் துணைக் கட்சிகளாகவே இருக்கும்.

இந்தப் பின்னணியில் மாகாண சபைத் தேர்தல் நடக்கின்றது என்று வைத்துக் கொண்டால் அந்தத் தேர்தல் முடிவுகள் கடந்த 2018 நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை விடவும் மோசமாக இருக்கும். ஈஸ்டன் தாக்குதலைத் தெடர்ந்து வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த அனைத்து மாகாண சபைகளையும் ராஜபக்ஸ தரப்பினரே கைப்பற்ற அதிகமான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் ஒன்று முன்கூட்டி வருமாக இருந்தால் ஏற்கெனவே பலயீனப்பட்டிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி மேலும் பின்னடைவை எதிர் நோக்கும். சில வாரங்களுக்கு முன்னர் நாம் குறிப்பிட்டிருந்த படி சிறியதோர் இடைவெளியில் கோதாவுக்கு சாதகமாகவே களநிலவரம் இருக்கின்றது என்று சொல்லி இருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அந்த வாய்ப்பு மேலும் ஈஸ்டர் தாக்குதலால் அதிகரித்தி விட்டது என்பதுதான் எமது மதிப்பீடு.

தற்போதய சூழ்நிலையில் கடந்த தேர்தலில் கிருஷ்தவ மக்களின் பெரும்பான்மை வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே கிடைத்தது. இந்த முறை அதில் கணிசமான வீழ்ச்சிக்கு இடமிருக்கின்றது.

முஸ்லிம் பிரதேசங்களில் வழக்கமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கின்ற ஆரவாரம் செல்வாக்கு இந்த முறை குறைவாகவே இருக்கும். முஸ்லிம் மக்களின் குறிப்பிடத்தக்க ஒரு தொகையினர் தமது அரசியல் நிலைப்பாடுகளை வருகின்ற தேர்தல்களில் மாற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது. அதனை ராஜபக்ஷாக்கள் பாவித்துக் கொள்வார்களானால் இது சாத்தியம்.

முஸ்லிம் அரசியல் தலைமைகள் கடந்த காலங்களில் பெரிதாக முஸ்லிம் சமூகத்தற்கு எதைiயுமே பெற்றுக் கொடுக்கவில்லை. நெருக்கடியான நேரங்களில் கூட சமூகத்தைப் பற்றி யோசிப்பதை விட அவர்களின் அரசியல் இருப்பைப் பற்றி மட்டுமே அவர்களுக்கு சிந்திக்க வேண்டிய ஒரு நிலை இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது.

இதனால் வருகின்ற எந்தத் தேர்தல்களானாலும் முஸ்லிம் சமூகத்திற்கு அதைப் பெற்றுத் தருகின்றோம், இதனைப் பெற்றுத் தருகின்றோம் என்பதனை அந்த அரசியல்வாதிகளால் வாக்குறுதிகள் கொடுக்க முடியாது.

முஸ்லிம் அரசியல் தலைமைகள் தற்போது கரைபுரண்டோடும் ஆற்றுவெள்ளத்தில் அடிபட்டுப்போகின்ற ஒருவனின் நிiலைக்கு ஆளாக்கப் பட்டிருக்கின்றார்கள். அவர்கள் எந்தத் துரும்பைப் பிடித்து கரைசேரலாம் என்று சிந்திக்கின்ற ஒரு காலகட்டத்தில் இருக்கின்றார்கள். எனவே வருகின்ற தேர்தல்களில் சமூகத்தை உசுப்பேற்றி இன உணர்வுகளை போசித்து வாக்குகளைச் சேகரிப்பது என்பது அவர்களுக்கு ஒரு கஷ்டமான காரியமாக இருக்கும். இதற்கு ஈஸ்டர் தாக்குதலே முக்கிய காரணம்.

மேலும் நாங்கள் பேரம் பேசி இருக்கின்றோம் அதைப் பெற்றுத் தருவோம் இதனைப் பெற்றுத் தருவோம் என்று இவர்களுக்கு பெரிய கட்சிகளை சொல்லி வாக்குச் சேகரிக்கவும் முடியாது. எந்த சூழ்நலையிலும் முஸ்லிம் கட்சிகள் ஒரு பொதுத் தேர்தல் என்று வந்தால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுப் போட்டே அதற்கு முகம் கொடுக்கவே முனையும்.

கையைக் கட்டிக் கொண்டு வேட்பாளர் பட்டியலில் இடம் தேடுகின்ற ஒரு நிலைதான் இன்று முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு இருக்கின்றது. என்றாலும் மேடைகளில் இவர்கள் வேறு விதமாகத்தான் கர்ச்சிப்பார்கள்.

பெரிய கட்சிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு கூட்டணி அமைத்துக் தேர்தலுக்கு முகம் கொடுக்கின்ற காரியத்தை இந்த முறை மேற்கொள்வது இவர்களுக்குச் சிரமமாக இருக்கும். அத்துடன் தேர்தல் காலங்களில் தனவந்தர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அந்தக் கோட்டாவைப் பெற்றுத் தருகின்றோம் இந்தக் கோட்டவைப் பெற்றுத் தருக்கின்றோம் என்று தேர்தல்களுக்கு பண வசூல் பண்ணுவதொல்லாம் இந்த முறை சிக்கலாக இருக்கும்.

கொடுத்த கோட்டாக்களும் பண்ணிய வியாபாரங்கள் பற்றி ஏற்கெனவே கேள்விகள் துவங்கி விட்டது. இவை அனைத்தும் உண்மை இல்லாவிட்டாலும் கேள்விகள் பலமாக இருக்கின்றது.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் மதத் தலைவர்களையும் அந்த சமூகத்தின் சிவில் அமைப்பக்களையும் முதன்மைப் படுத்தி அரசியல் தலைவர்கள் பின்வரிசை என்ற நிலையில் அங்கு காரியங்கள் அரங்கேருவதைப் பார்க்க முடியும்.

வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் தலைமைகள் எப்படியும் தமது பிரதிநித்துவத்தை வென்றெடுத்துக் கொள்வார்கள் அதற்கான வாய்ப்புக்கள் அவர்களுக்கு புகோளரீதியில் எப்போதும் இருக்கின்றது.

என்றாலும் அதுவும் பழைய நிலையில் அமையாது பலம் பிரிந்து போக்கின்ற ஒரு நிலை காணப்படுகின்றது. என்பது எமது கருத்து அவர்கள் எப்படி ஆசனங்களை வென்றெடுத்தாலும் பொதுவாக ஒரு நோக்கத்துக்காகவே குரல் கொடுக்க வேண்டி இருக்கும். தன்னலத்துக்காக அரசுடன் தனிப்பட்ட ரீதியில் அவர்கள் கொடுக்கல் வாங்களில் ஈடுபட மாட்டார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.

மலையகத்தில் வழக்கம் போல் தொண்டா, திகா, மனோ, சேகரா என்று அங்கு ஆதிக்கப் போட்டி இருக்கும்.

ஜேவிபியும் வருகின்ற தேர்தலில் வித்தியாசமாக ஏதாவது கோஷங்களை வைத்து தேர்தலுக்கு முகம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்.

ஏந்தத் தேர்தல் நடந்தாலும் வருகின்ற தேர்தல்களில் கடும்போக்கு பௌத்த மதகுருமாரும் இனவாத அமைப்புக்களும் முஸ்லிம்களுக்கு எதிரான கடுமையான கோஷங்களை முன்வைப்பார்கள். ராஜபக்ஸாக்கள் இது விடயத்தில் இரஜதந்திரமாக காய் நகர்த்தவர்கள்- சாதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்.

எமது பார்வைப்படி ஈஸ்டர் தாக்குதல் வருகின்ற தேர்தலில் வெகுஜன இயக்கங்களையும் சிவில் அமைப்புக்களையும் பலயீனப்படுத்தி விட்டது. சமூகத்தின் அரசியல் ஆர்வத்தையும் உச்சாகத்தையும் இது நோயாளியின் நிலைக்குத் தள்ளிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தத் தாக்குதல் மொத்தத்தில் சிறு தொகை பௌத்த கடும்போக்காளர்களை உச்சகப்படுத்திவிட்டது.

அரசியல் தீர்வு புதிய அரசியல்யாப்பு என்பது எல்லாம் கிடப்பில் போடப்பட்ட கோவைகள் நிலைக்கு வந்த விட்டது. சர்வதேச சமூகம் இவற்றைப் பற்றி இப்பபோது எந்தளவுக்கு அழுத்தங்களைக் கொடுக்க முடியும் என்பது கேள்விக்குறி.

முன்னாள அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா வருகின்ற ஜனாதிபதி தேர்தலுக்கு மிகச் சிறந்த வேட்பாளர் பேராயர் கார்தினல் மெல்கேலம் ரஞ்சித் பெணாண்டேதான் என்று ஊடகங்களுக்கு கூறி இருக்கின்றார்.

இவர் இந்த விவகாரத்தில் நடந்து கொண்டு முறைவையை வைத்துத்ததான் தான் இதனைக் குறிப்பிட்டதாகவும் அவர் கூறி இருக்கின்றார். இது ஒரு அரசியல் நகைச்சுவையாக இருந்தாலும் அதில் நியாயம் இருக்கின்றது.

ஈஸ்டர் தாக்குதல் அழிவுகளை வரலாறு மறக்காது மன்னிக்காது. ஆனால் பேராயர் இதனால் நமது நாட்டில் மட்டுமல்ல முழு உலக்கிற்கும் ஹீரோவாகி விட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team