நுஜா அங்கத்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வைப்பு - Sri Lanka Muslim

நுஜா அங்கத்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வைப்பு

Contributors
author image

பைஷல் இஸ்மாயில்

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (12) அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் அதன் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கல்முனை மாநகர சபையின் செயலாளரும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் முன்னாள் உதவிச் செயலாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயில், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், ஸ்தாபகச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூர் ஆகியோர் கலந்து கொண்டு நுஜா அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டையை வழங்கி வைத்தனர்.

இதில் நுஜா ஒன்றியத்தின் செயலாளர் பைஷல் இஸ்மாயில், பொருளாளர் ஜூல்பிக்கா செரீப், பிரதித் தலைவர்களான எம்.எச்.எம்.கியாஸ், எஸ்.எல்.எம்.அபுபக்கர், தேசிய இணைப்பாளர் சலீம் றமீஸ், தேசிய அமைப்பாளர் எம்.எச்.முஸ்தாக் முஹம்மட் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

DSC_8849 DSC_8887 DSC_8935

Web Design by Srilanka Muslims Web Team