ஓட்டமாவடியில் இராணுவத்தினருக்காக துஆ பிரார்த்தனை - Sri Lanka Muslim

ஓட்டமாவடியில் இராணுவத்தினருக்காக துஆ பிரார்த்தனை

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எம்.ரீ.எம்.பாரிஸ்


இராணுவ யுத்த வீரர்களின் உயிர் நீத்த 29வது நினைவு தினத்தை முன்னிட்டு உயிர் நீத்த வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களின் ஆத்மா சாந்திக்காகவும் நாட்டில் நிலையான சமாதானமும்,அமைதியும் நிலை பெற வேண்டி சமய அனுஷ்டானங்கள் நேற்று (12.05.2019) இராணுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைவாக மட்டக்களப்பு ஓட்டமாவடி பெரிய முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலில் தாய் நாட்டிற்காக யுத்தத்தில் உயிர் நீத்த வீரர்களை நினைவு கூர்ந்து நாட்டு மக்களுக்காக இராணுவ வீரர்கள் ஆற்றிவரும் அர்ப்பணிப்பான சேவையினைப் பாராட்டியும் நாட்டில் நிலையான சமாதானம் மேம்படவும், ஒற்றுமை மிக்க பாதுகாப்பான நாடு ஒன்றினை கட்டியெழுப்புவதற்காக இறை நல்லாசி வேண்டி விசேட துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றது.

இவ் விசேட துஆப் பிரார்த்தனையினை ஓட்டமாவடி பெரிய முகைதீன் ஜூம்மா பள்ளிவாயலின் பேஷ்டி இமாம் முஸ்தபா மௌலவி நடாத்தி வைத்தார்.

இதன் போது மட்டக்களப்பு நாவலடி, கயங்கேணி இராணுவ முகாம்களின் ஆறாவது கஜபா படைப்பிரிவின் இராணுவ அதிகாரி மேஜர் அமர அபோகோன், கேப்டன் ஜெயவீர உள்ளிட்ட இராணுவ வீரர்கள்,பள்ளிவாயல் தலைவர் நிர்வாக சபை உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team