கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லா - Sri Lanka Muslim
Contributors
author image

Editorial Team

தற்கொலைக் குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய மொஹமட் இன்சாக் அஹமட்டின் வெல்லப்பிட்டிய தொழிற்சாலையில் வைத்து கைதுசெய்யப்பட்ட, கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு, கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று (13) பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு அனுமதியளித்துள்ளார்.

அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் 14, 15ஆம் திகதிகளில் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு, சிறைச்சாலைகள் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற வேண்டும் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்திருந்ததை கவனத்தில் எடுத்த, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team