குளியாப்பிட்டிய சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை - தயாசிறி » Sri Lanka Muslim

குளியாப்பிட்டிய சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை – தயாசிறி

thayasiri-jayasekara

Contributors
author image

Editorial Team

குளியாப்பிட்டியவில் நடைபெற்ற சம்பவத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் கிடையாது எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேரக, சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட இளைஞர்களை பொலிஸாரே தற்காலி பிணையில் விடுதலை செய்துள்ளனர். என்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி நான் அவர்களை விடுவிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

குளியாப்பிட்டி பிரதேசத்தில் நேற்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளின் பின்னணியில் நான் இருப்பதாக சில ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டிருந்தன.

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது பிங்கிரய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஹெட்டிப்பொல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இதன் காரணமாகவே குறித்த பிரதேச மக்கள் முரண்பட்டனர். அந்த பிரதேசம் என்னுடைய தொகுதிக்கு கீழ் வருவதால் முரண்பாடுகள் உச்சமடையாமல் தடுப்பதற்காகவே நான் சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்தேன் என்றும் தயாசிறி தெரிவித்தார்.

Web Design by The Design Lanka