பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் » Sri Lanka Muslim

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர்

ranil

Contributors
author image

Editorial Team

குளியாபிட்டிய பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங், நாட்டில் சமாதானத்தை உறுதிப்படுத்தி முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து மஹாசங்க தேரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரதேச மக்கள் என அனைத்து தரப்பினைரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

பயங்கரவாதிகளின் செயற்பாடுகளினால் உயிர்த்த ஞாயிறன்று பேராபத்து இடம்பெற்றது. ஆனால் வெசக் தினத்தை குழப்புவதற்கு இடமளிக்க முடியாது. எனவே பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் முப்படைகளுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அப்பாவி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வெசக் தினத்தை குழப்பியடிக்க இடமளிக்க போவதில்லை. தேவையான பாதுகாப்பை ஏற்படுத்தி அமைதியான முறையில் வெசக் தின கொண்டாட்டங்கள் இடம்பெற வழிவகுக்கப்படும்.

அதற்காக ஒத்துழைப்புகளை பாதுகாப்பு துறைக்கு வழங்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றேன். இங்கு இடம்பெற்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது பிரதமர் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தினார்.

Web Design by The Design Lanka