ஏறாவூரில் பதற்றமில்லை: பொய்ச் செய்திகளை பரப்ப வேண்டாம் » Sri Lanka Muslim

ஏறாவூரில் பதற்றமில்லை: பொய்ச் செய்திகளை பரப்ப வேண்டாம்

IMG_20190515_110237

Contributors
author image

Editorial Team

தனிப்பட்ட தகராறு காரணமாக ஏறாவூர் புகையிரத நிலைய வீதியில் சித்து வரும் முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான கார் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது.

கார் உரிமையாளருக்கு அடிக்கடி வரும் SMS, அவரை மிரட்டுவதாக வந்துள்ளதோடு,
சென்ற மாதம் அவரது கார் இன்ஜினுக்குள் சீனி அள்ளிப்போட்ட சம்பவமும் நடந்துள்ளது.

இது விடயமாக ஏற்கனவே ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பதாக கார் உரிமையாளர் தெரிவித்தார்.

நேற்று மாலையும் அவரை பயமுறுத்தும் SMS வந்ததாகவும் தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு 12.45 மணியளவில் வீட்டு வாசலில் போடப்பட்ட காருக்குள் வெடிப்பு சத்தம் கேட்டு கதவை திறந்த போது இருவர் ஓடிச் செல்வதை கண்டுள்ளார்.

#குறிப்பு

விடயத்தை சரியாக விளங்காது சமூகவலைத்தளங்களில் தகவல் பரிமாறுவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளுங்கள்.

Web Design by The Design Lanka