Menaka Wasantha எனும் சிங்கள சகோதரரின் பதிவே இதுவாகும். » Sri Lanka Muslim

Menaka Wasantha எனும் சிங்கள சகோதரரின் பதிவே இதுவாகும்.

FB_IMG_1557892081137

Contributors
author image

Editorial Team

இது மினுவங்கொட ‘பெளஸ் ஹோட்டல் ‘.
இங்கு வேலை செய்த அனைவருமே சிங்கள மக்கள்.

விமான நிலையத்துக்குப் போகின்ற/வருகின்ற வாகனங்கள் இவ்விடத்தில் நிறுத்தி , எதையாவது ருசித்து விட்டுப் போவது வழக்கம்.

எப்போதும் சனக் கூட்டம் நிரம்பி வழியும் இடம். இது பலரது கண்களுக்கு உறுத்தலாயும் அமையும்.

12 வருடங்களாக மினுவங்கொடவில் புழங்கித் திரியும் நான் கூட இந்த ஹோட்டலில் தேனீர் அருந்தியிருக்கிறேன்.

ஒரு முறை தேனீர் அருந்தும்போது அங்கு பணிபுரியும் சிங்களப் பெண்மணியோடு கதைத்துக் கொண்டது ஞாபகம் வருகிறது.
“அநியாயம் சொல்லக் கூடாது மகனே..இந்த முதலாளி எங்களுக்கு மாதம் 60 ஆயிரம் அளவில் சம்பளம் தருகிறார்.
அது தவிர, எங்களது பெரு நாள்/புது வருடத்துக்கு ‘போனஸ்’ கூடத் தருகிறார்.
இதையே எம்மவர் யாராவது எமக்குச் செய்வார்களா?” என்று பூரித்துக் கொண்டார்.

வெளியேறும் போது , வாசலில் நின்ற காவலாளியிடமும் பேச்சைக் கொடுத்தேன்.
“நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஒரு அவசரத்துக்கு உதவி கேட்டால் பணமும் கொடுக்கிறார்கள்.
சொல்லப் போனால் எங்கள் மக்களைவிட இவர்கள் சிறந்தவர்கள். நானென்றால் இந்த இடத்தை விட்டும் ஒரு நாளும் விலகப் போவதில்லை.” என வியந்து கொண்டார்.

இப்போதென்ன, பெளஸ் ஹோட்டலுக்குப் பதிலாக, அவ்விடத்தில் – சிதைக்கப்பட்ட குப்பை மேடொன்று கிடக்கிறது.

பிரதேச அரசியல்வாதிகளும் மனிதாபிமானமற்ற ஒரு கும்பலும் சேர்ந்து , நூற்றுக் கணக்கான சிங்களச் சகோதரர்களது அன்றாடப் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார்கள்!

இதற்கிடையில் இந்தக் கலகத்தில் , உடைமைகளைக் கொள்ளையடித்தும் இருக்கின்றனர்!

இந்த இனவாதக் கும்பலைக் கட்டிப் போடுமளவுக்கு அரசுக்கு முதுகெலும்பில்லையென்பதைச் சுடிக் காட்டுவதும் இங்கு பொருத்தமாயிருக்கும்.

Web Design by The Design Lanka