வெறும் பொருளாதார நஷ்ட ஈடுகளால் எல்லாவற்றையும் மீட்டுவிட முடியாது » Sri Lanka Muslim

வெறும் பொருளாதார நஷ்ட ஈடுகளால் எல்லாவற்றையும் மீட்டுவிட முடியாது

IMG_20190515_150903

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

வெறும் பொருளாதார நஷ்ட ஈடுகளால் எல்லாவற்றையும் மீட்டுவிட முடியாது.
முதலீடு செய்யப்பட்ட காலமும் நேரமும் மீட்கமுடியாதவை. விலை மதிப்பற்றவை.

தனது கல்வி,வாலிபம்,சௌகரியம் அத்தனையையும் தொழிலை வளர்த்தெடுப்பதற்காக அர்பணித்தவர்களுக்கு நஷ்டஈட்டை எந்த அடிப்படையில் கொடுக்க வேண்டும் என்று புதிய சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவேண்டும்.

பொருட்கள், கட்டிடங்களுக்கு தற்போதைய பெறுமதியை கணக்கிடுவதுடன் முயற்சிக்கும் அர்பணிப்புகளுக்கும் அதைவிட பன்மடங்கு பதிலீடு கொடுக்கப்படவேண்டும்.

பலவருடங்களாக எத்தனையோ சிரமங்களை தாங்கி ஒரு தொழிலை உருவாக்கி வளர்த்தெடுக்க ஒரு சாராய போத்திலுக்கு அடிமைப்பட்ட அட்டூளியன் அத்தனையையும் ஒரு நொடியில் சாம்பலாக்குவதும், கண்துடைப்புக்கு பொருளுக்கு நஷ்டஈடு கொடுத்து பைஃலை மூடுவதும் தீர்வாகாது

பொருள், கட்டுமானங்களுக்கான பெறுமதியின் மூன்றுக்கு மேற்பட்ட மடங்காயினும் காலத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் நஷ்டஈடாக வழங்க வேண்டும்.

ஒரு மில்லியன் பெறுமதியான பொருள், கட்டுமான சேதத்துக்கு குறைந்தது 04 மில்லியனாவது நஷ்டஈடு வழங்கவேண்டும்.

உயிரிழந்தோருக்கான நஷ்ட ஈடு எவ்வளவு என்பதை எப்படி நிர்ணயிப்பது?
அந்த கொலையாளிகளுக்கு உரிய தண்டனையை வழங்குவதே முதல் அரச கடமை.
பின்னர் அந்தந்த குடுபங்களுக்கு கொல்லப்பட்டவரால் கிட்டச்சாத்தியமாயிருந்ததாக கணிப்பிடிக்கூடிய பொருளாதார பயன்களின் பெறுமதியுடன் Blood money எனும் நஷ்ட ஈட்டையும் கூட்டிக் கணக்கிட்டு கொடுக்க வேண்டும்.

பழைய நஷ்டஈட்டுக்கொடுப்பனவு முறைமையை புறக்கணித்துவிட்டு மேற்சொன்ன அம்சங்கள் உள்வாங்கப்பட்ட புதிய நஷ்டஈட்டு முறையை நடைமுறைப்படுத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

நடந்து முடிந்தவைக்கான பரிகாரம் இப்படி அமைவதால் மட்டும் எதிர்காலத்தை உத்தரவாதமுள்ளதாக மாற்ற முடியாது,

ஒவ்வொரு கிராம சேவகப்பிரிவுக்கும் அந்த பிரிவில் வாழும் மக்கள் விகிதாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான குறைந்தது ஐம்பது நபர்களைக்கொண்ட ‘Unity force’ களை உருவாக்கி அந்தந்த பகுதிகிளை பாதுகாக்கும் அதிகாரமும் தேவையான ஆயுதங்களும் இப்பிரிவுகளுக்கு வழங்கப்படவேண்டும்.

இப்பிரிவுகள் பிரதேச செயலாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கவேண்டும்.

தாக்குதல்கள்களை மேற்கொண்டோரில் அனேகமானோர் அந்த கிராமத்தை சேர்ந்தோரல்ல என்பதை நேற்றுவரை நடந்தவை சாண்றுகின்றன.

பல்லாண்டுகளாக அடுத்தடுத்த வீடுகளில் ஒன்றாய் பிறந்து, விளையாடி வளர்ந்த மக்கள் ஓரளவுக்கேனும் இத்தகைய கொடுமைகளை செய்ய வருவோரை தடுத்து நிறுத்தவே முனைவார்கள்.

பக்கத்து வீட்டானையும் பழி தீர்க்கும் பண்பு சிங்களவர்களிடம் பொதுவாக இல்லை என்பதை அவர்களுடன் பழகியோர் நன்கு அறிவர்

‘கமே கொல்லா’, கமே கெல்லே’ என்றாலே சிங்களவர்களுக்கு தனிப்பிடிப்பும் பாசமுமுண்டு.

இந்த உளவியலுக்கு தகுந்தால் போலான கிராம மட்டத்திலான Unity force எனும் கூட்டுப்படைகளை முஸ்லிம்கள் சிதறி வாழும் பகுதிகளில் ஸ்தாபிப்பதையும் பரிசீலியுங்கள்.

எல்லாவற்றுக்கும் வழிவகைகள் உண்டு உரையாடல்களை விசாலமாக்குங்கள்

-வஃபா பாறுக்-

Web Design by The Design Lanka