நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் - அமைச்சர் ரிஷாட் பதியுதீன் » Sri Lanka Muslim

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

rishad

Contributors
author image

Editorial Team

 

நம்பிக்கை இல்லா பிரேரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாட்டிற்கு எதிராகவோ அல்லது இந்த நாட்டு மக்களை காட்டிக் கொடுக்கும் செயலிலோ அல்லது நம்பிக்கை இல்லாத விடயங்கள் எதிலும் நான் பங்குபற்றவில்லை. நான் என்றும் இந்த நாட்டின் வளர்ச்சியை நேசிக்கும் ஒருவனாகவே இருந்து வருகின்றேன்.

முஸ்லிம் பெயரில் உள்ள ஒரு சிலர் செய்த பயங்கரவாத செயலுக்கு முஸ்லிம்கள் அனைவரையும் சந்தேகம் கொள்வதோ அல்லது முஸ்லிம் பிரதிநிதித்துவங்களுக்கு எதிராக செயல்படுவதை ஏற்க முடியாது.

இனவாதிகள் என் மீது அபாண்டங்களை சுமத்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர தயாராகி வருகின்றனர்.
அதனை கண்டு நான் அச்சப்படவில்லை. அதை எதிர்கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka