முஸ்லிம் பிரதேசத்தினுள் நுழைந்து கைத்துப்பாக்கியைக் காட்டி இளைஞர்களை மிரட்டிய மர்ம நபர் யார்? » Sri Lanka Muslim

முஸ்லிம் பிரதேசத்தினுள் நுழைந்து கைத்துப்பாக்கியைக் காட்டி இளைஞர்களை மிரட்டிய மர்ம நபர் யார்?

Crumpled question marks heap

Contributors
author image

ரபாய்டீன் பாபு ஏ .லத்தீப்

திருகோணமலை நகர் ஜமாலியா முஸ்லிம் கிராமத்தில் கடந்த 24 மணித்தியாலமும் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேநேரம் நேற்று பிற்பகல் இனந் தெரியாத நபர்கள் இருவர் மோட்டர் சைக்கிளில் சிவில் உடையில் உள்நுளைந்துள்ளனர். இதனை அவதானித்த ஊர் மக்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு வந்தவர்களிடம் வாக்குவாதப்பட்டுள்ளனர்.

தங்களை யார் என்பதை இனங்காட்டிக் கொள்ளாது வந்தவர்களில் ஒருவர் தனது கைத்துப் பாக்கியைக் காட்டி இளைஞர்களை மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

இதேநேரம் அதே நபர்கள் தக்வா நகர் பகுதியில் வேண்டுமென்றே ஒரு இளைஞனை வம்புக்கு இழுத்து கைத்துப்பாக்கியை நெற்றியில் வைத்து மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர். இவர்கள் புலனாய்வு துறையினரா ? அல்லது குழப்பம் விளைவிக்க வந்தவர்களா? என்பது தெரியவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக ஜமாலியாவில் கடமையில் இருந்த காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

Web Design by The Design Lanka