பெப்ஸி, கோக் விற்பனைக்கு ஆகஸ்ட் 15 முதல் தமிழகத்தில் தடை? - Sri Lanka Muslim

பெப்ஸி, கோக் விற்பனைக்கு ஆகஸ்ட் 15 முதல் தமிழகத்தில் தடை?

Contributors
author image

Editorial Team

(BBC)


தமிழகத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து பெப்ஸி மற்றும் கோக் ஆகிய பானங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று வர்த்தக அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது போன்ற அறிவிப்பு வெளியாவது இது முதல்முறை அல்ல. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சில வியாபாரிகள் கோக் மற்றும் பெப்ஸி பானங்களை விற்பனை செய்யப் போவதில்லை என்று முடிவெடுத்திருந்தனர்.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR
Image captionகோப்புப்படம்

இந்த முடிவுக்கு இரண்டு காரணங்களை அவர்கள் தெரிவித்தனர். ஒன்று உடல்நலத்திற்கு அவை தீங்கு விளைவிக்கலாம். மற்றொன்று, இந்த நிறுவனங்களால் அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது என்று கூறினர்.

ஆனால் ஆறேழு மாதங்களில் மீண்டும் அவற்றை விற்பனை செய்ய தொடங்கினர்.

தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு குறித்து கருத்து தெரிவிக்க பெப்ஸியின் செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார் என்றும் கோக் நிறுவனம் எந்த பதிலும் கூறவில்லை என்றும் அந்நாளிதழ் செய்தி கூறுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team