எல்லா மொழி விக்கிபீடியாவும் சீனாவில் முடக்கம் » Sri Lanka Muslim

எல்லா மொழி விக்கிபீடியாவும் சீனாவில் முடக்கம்

_106976697_0219a009-a637-4812-a9f5-bd8d9b3c6a64

Contributors
author image

BBC

ன பெருநிலப்பரப்பில், ஆன்லைன் என்சைக்லோபீடியாவான விக்கிபீடியா தளம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது என அந்த வலைதளத்தை நடத்திவரும் விக்கிமீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாத இறுதியில் இருந்து விக்கிபீடியாவின் அனைத்து மொழித்தளங்களையும் சீனாவில் அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று விக்கிபீடியா நிறுவனம் கூறியுள்ளது.

இது தொடர்பாக தங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஃபேஸ்புக், டிவிட்டர் உட்பட நூற்றுக்கணக்கான வலைதளங்கள் சீன அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன. சீன மொழி விக்கிபீடியா தளத்தை 2015ஆம் ஆண்டிலிருந்து பயனர்கள் பயன்படுத்த முடிவதில்லை.

எவர் வேண்டுமானாலும் பக்கங்களை உருவாக்க, எடிட் செய்ய வழியுள்ள விக்கிபீடியாவை 2017-ம் ஆண்டு துருக்கி தடை செய்தது. இந்த ஆண்டு வெனிசுவேலாவில் இந்த தளம் அவ்வப்போது முடக்கப்படுகிறது.

Web Design by The Design Lanka