மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதிகளை மூடுவதை தவிர்க்கவும் » Sri Lanka Muslim

மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதிகளை மூடுவதை தவிர்க்கவும்

Contributors
author image

Presidential Media Division

பிரமுகர்களின் வாகன போக்குவரத்திற்காக மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் வகையில் எக்காரணம் கொண்டும் வீதிகளை மூடி வைக்கக் கூடாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று (21) பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி, இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன், பிரமுகர்களின் வாகன போக்குவரத்திற்காக வீதிகள் மூடப்படுவதனால் மக்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அதற்கமைய பிரமுகர்களின் பாதுகாப்புத் துறையினருக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்துமாறும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படுத்தாதவண்ணம் பிரமுகர்களின் வாகனங்களை செலுத்துமாறும் உரிய துறையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka