அக்குரஸ்ஸ: பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பலி » Sri Lanka Muslim

அக்குரஸ்ஸ: பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பலி

die6

Contributors
author image

Editorial Team

அக்குரஸ்ஸ, ஊருமுத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை சுற்றிவளைக்க முற்பட்டபோது பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (22) மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 30 வயதான கசுன் சம்பத் எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அப்பகுதியை சேர்ந்த லொகுகே தர்மசிறி என்பவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமபவம் தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by The Design Lanka