ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு: ஜனாதிபதி ஒப்பம் » Sri Lanka Muslim

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு: ஜனாதிபதி ஒப்பம்

bbs

Contributors
author image

Editorial Team

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, பொதுமன்னிப்பளித்து அதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (22) மாலை கையொப்பமிட்டுள்ளார்.

அவர் தொடர்பிலான அறிக்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தினால், நேற்றுமுன்தினம் (21) இரவு அனுப்பப்பட்டிருந்தது, அந்த அறிக்கையில் தேரரின் சிறை தண்டனை குறித்த தகவல்களும் அவர் சிறைச்சாலைக்குள் நடந்துகொண்ட விதம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, அவருக்கு பொதுமன்னிப்பளிப்பதற்காக ஆவணத்தில், ஜனாதிபதி கைச்சாத்திட்டார்.

ஜனாதிபதியின் கையொப்பமிடப்பட்ட ஆவணம், சிறைச்சாலை திணைக்களத்துக்கு நேற்றுமாலையே அனுப்பிவைக்கப்பட்டது என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Web Design by The Design Lanka