பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஞானசார தேரர் சிறைச்சாலையில் இருந்து வௌியேறினார் » Sri Lanka Muslim

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஞானசார தேரர் சிறைச்சாலையில் இருந்து வௌியேறினார்

Contributors
author image

Editorial Team

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இன்று வழங்கப்பட்டது.

இதனை அடுத்து பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஞானசார தேரர் விடுதலையை முன்னிட்டு அவரை வரவேற்பதற்காக அதிகளவிலான தேரர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தை சூழ காத்திருந்தனர்.

நீதிமன்றத்தை அவமதித்ததாக ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு 2018 ஆகஸ்ட் 8 ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு 19 வருட கடூழிய சிறைத் தண்டனையை 6 வருடங்களில் அனுபவித்து நிறைவு செய்யும் வகையில் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka