மக்களவைத் தேர்தல் 2019: பா.ஜ.க முன்னிலை - காஷ்மீரின் நிலை என்ன? » Sri Lanka Muslim

மக்களவைத் தேர்தல் 2019: பா.ஜ.க முன்னிலை – காஷ்மீரின் நிலை என்ன?

_107080047_5be333e8-58a4-414d-8bf9-72152ab01b85

Contributors
author image

BBC

மாலை 4.30 மணி நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சி 343 தொகுதிகளிலும், காங்கிரஸ் 87 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 112 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

காஷ்மீர் கவலை

பா.ஜ.கவின் இந்த வெற்றியானது இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரிகளை கவலைக் கொள்ள செய்துள்ளது.

காஷ்மீர் பள்ளதாக்கிலிருந்து செய்தி தரும் பிபிசி செய்தியாளர் ஆமிர், “இரண்டாவது முறையாக வெற்றி பெறுள்ள பா.ஜ.க, காஷ்மீர் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று காஷ்மீர் மக்கள் அஞ்சுகின்றனர்” என்கிறார்.பா.ஜ.கவின் வெற்றியை கொண்டாடும் ஜம்மு மற்றும் காஷ்மீர் பா.ஜ.கவினர்

காஷ்மீருக்கு தேவை அரசியல் தீர்வு; ஆயுதத் தீர்வல்ல. பிற மாநிலங்களில் வாக்குகளை வாங்க பா.ஜ.க காஷ்மீர் விவகாரத்தை பயன்படுத்தி கொள்கிறது என்று ஒரு மாணவர் கூறியதாக தெரிவிக்கிறார் ஆமிர்.

ஆறு தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீரில் 3 தொகுதிகளில் பா.ஜ.கவும், 3 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.

வேலையில்லா திண்டாட்டம், விவசாய நெருக்கடி

பிபிசியின் இந்திய செய்தியாளர் செளதிக் பிஸ்வாஸ், “எப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது, விவசாய நெருக்கடி நிலவுகிறது, தொழிற்சாலை உற்பத்திகளும் குறைந்துள்ளன. பல இந்தியர்கள் பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டார்கள். ஜி.எஸ்.டி மீது வணிகர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால், இது எதற்காகவும் மக்கள் மோதியை குற்றஞ்சாட்டவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன”. என்று தனது பார்வையை பதிவு செய்கிறார்.

கிழக்கு கொல்கத்தாவை சேர்ந்த ஒரு வாக்காளர், “வளர்ச்சி குறைவாகதான் உள்ளது. ஆனால், நாடு பாதுகாப்பாக இருக்கிறது.” என்கிறார்.

மோதி அலை

கடந்த டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்த ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள இடங்களில் 25 தொகுதிகளில் 24ல் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

சட்டமன்ற தேர்தலில் வென்ற காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தது.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய ராஜஸ்தானை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் அவினாஷ் கல்லா, “மோதி அலை இன்னும் பழுதாகாமல் ராஜஸ்தானில் இருக்கிறது” என்கிறார்.

மேலும் அவர், “சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு அப்போதைய பா.ஜ.க முதல்வர் வசுந்தராதான் காரணம் என்பதையும் இந்த வெற்றி காட்டுகிறது” என்கிறார்.

Web Design by The Design Lanka