உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் மியன்மாரில் கைது » Sri Lanka Muslim

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் மியன்மாரில் கைது

1558673348-Myanmar-2

Contributors
author image

Editorial Team

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார் 250 பேரைக் கொல்லப்பட்டனர்.

39 வயதுடைய அப்துல் சலாம் இர்ஷாட் மொஹமட் என்ற இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தன்னுடைய சுற்றுலா விசாவினை புதுப்பிக்க யாங்கூன் நகரில் உள்ள குடிவரவு அலுவலகத்தில் சென்றபோதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சுமார் 1 வருடம் 2 மாதங்களுக்கும் மேலாக மியன்மாரில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மலேசிய பொலிஸாரினால் அனுப்பப்பட்ட எச்சரிக்கையினை தொடர்ந்து, யாங்கோன் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த புதன் கிழமை சோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka