தாக்குதல்கள் கண்டறியும் தெரிவுக்குழுவுக்கு 8பேர் » Sri Lanka Muslim

தாக்குதல்கள் கண்டறியும் தெரிவுக்குழுவுக்கு 8பேர்

parliement

Contributors
author image

Editorial Team

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிந்து, நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழுவுக்கு, சபாநாயகர் கரு ஜயசூரியவால், 8 பேரடங்கிய குழுவினர், நேற்று (23) நியமிக்கப்பட்டனர்.

இன்று முற்பகல் 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியபோது, இந்தக் குழு தொடர்பான அறிவித்தலை, சபாநாயகர் விடுத்தார்.

பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிங்க தலைமையிலான இந்தக் குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரவூப் ஹக்கம், ரவி கருணாநாயக்க, ஜயம்பதி விக்கிரமரத்ன, காவிந்த ஜயவர்தன, ஆசு மாரசிங்க, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

Web Design by The Design Lanka