தனியாக முஸ்லிம் சமுகத்திற்கு குரல் கொடுத்து வரும் ரிஷாட் பதியுதீன் » Sri Lanka Muslim

தனியாக முஸ்லிம் சமுகத்திற்கு குரல் கொடுத்து வரும் ரிஷாட் பதியுதீன்

Contributors

Aarshik Mohamed


தனது சிறுவயது முதலே பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அதனை எதிர்த்துப் போராடி இன்று தமிழ் பேசும் மக்களின் சிறந்த தலைவர்களில் ஒருவராக காணப்படுகின்றார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சொந்த மண்ணை விட்டு இடம்பெயர்ந்து கல்வியிலும் சிறந்து விளங்கிய ரிஷாட் பதியுதீன் வன்னி பிரதேசத்திற்கு கிடைத்த மிகச் சிறந்த ஆளுமை மிக்க தலைவர். மர்கூம் அஷ்ரப் அவர்களின் பின் முஸ்லிம் சமூகதிற்கு கிடைத்த சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக காணப்படுகின்றார்.

2001ம் ஆண்டு முதல் இன்று வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து, நாடு பூராகவும் முஸ்லிம் சமூகத்திற்கு பல சேவைகளை செய்து வருகின்றனறார். கட்சி பேதம், இனபேதம், மதபேதம் என்ற வேற்றுமையின்றி அனைவருருக்கும் சேவைகளை செய்யக்கூடியவர்.

என்றாலும் இவரைச் சுற்றி சதிவலைகள் பின்னப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவருக்கு எதிரான செயற்பாடுகள் இன்று ஆரம்பித்ததல்ல. வன்னியிலிருந்து இவருக்கு எதிரான காழ்புணர்வு எதிர்ப்பு ஆரம்பிக்கின்றது. சக்தி தொலைக்காட்சியின் பணிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ ரங்கா அவர்கள் வன்னியிலே அரசியல் களத்தில் குதிப்பதற்காக ரிஷாட்டிற்க்கு எதிரான சதிகளை ஆரம்பித்தார். அதற்கு அவர் பயன்படுத்திய ஆயுதம் ஊடகம் எனும் ஆயுதம் சக்தி தொலைக்காட்சியின் மின்னல் எனும் அரசியல் நிகழ்ச்சியை ரிஷாட்டிற்கு எதிராக சாதுரியமாக இவர் பயன்படுத்தினார். மக்களின் அபிமானத்தை வென்ற ரிஷாட் பதியுதீன் வன்னியில் இருந்தால் தன்னால் அரசியலில் செல்வாக்கு செலுத்த முடியாது என்பதற்காக வன்னி அரசியலில் இருந்து அவரை நீக்குவதற்காக ஸ்ரீலங்கா எவ்வளவோ முயற்சித்தும் அது பலிக்கவில்லை.

அதன் பின்னரும் அவர்கள் ரிஷாட்டிற்கு எதிரான பல பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதற்கு இனவாத ஊடகங்களும் துணையாக நின்றன.

ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, மன்னார் ஆலயத்திற்கு கல்வீசி தாக்கியதாக குற்றம் சுமத்தி மன்னார் கிறிஸ்தவர்களை ரிஷாட்டிற்கு எதிராக திசை திருப்ப முயற்சித்தமை.

இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை பரப்பினாலும் ரிஷாட்டின் நேர்மைக்கு முன் இவர்களால் நிற்க முடியவில்லை. இவ்வாறு சென்று கொண்டிருந்த ரிஷாட்டின் அரசியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுடைய ஆட்சியின் கீழ் 9 வருடங்கள் சிறந்த முறையில் அமைச்சராக இருந்தாலும் முஸ்லிம் சமூகத்திற்காக தனது அமைச்சுப் பதவியை தூக்கி எறிந்து 2015ஆம் ஆண்டு பொது எதிரணியில் இணைந்து கொண்டார். அதில் இருந்து இன்று வரை ரிஷாட் பதியுதீன் அவருக்கு எதிரான சதிவலைகள் பின்னப்பட்டவண்ணம் உள்ளது.

ரிஷாட் வில்பத்துவில் காடுகளை அழித்து குடியிருப்புகளை ஏற்படுத்துகிறார் என்று பொய்யான செய்தியை பரப்பிய இனவாத ஊடகங்களால் பல விவாதங்களுக்கு மத்தியிலும் அதனை நிரூபிக்க முடியாது போனது. சதிகாரர்கள் எவ்வாறு ரிசார்ட்டை வீழ்த்துவது என்று சிந்தித்து மேலும் பல குற்றச்சாட்டுகளை ரிசார்ட்டில் சுமத்தினார்கள்.

அதில் மிக முக்கியமானது, மலேசியவிலிருந்து சதோச நிறுவனம் ஊடாக மிளகாய் இறக்குமதி செய்து மீண்டும் விலையை உயர்த்தி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டார்.

அதிக சொத்துக்களை சேமிக்கிறார் என்று குற்றச்சாட்டப்பட்டார்.

ரிஷாட் பதியுதீன் அவர்களின் சகோதரர் சட்டத்துக்கு புறம்பாக அரச சொத்துக்களை பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மன்னார் முஸ்லிம் இளைஞர்களுக்கு தகுதியின்றி அரச வேலைகள் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

ரிஷாட் பதியுதீனுக்கு மன்னாரில் பல்லாயிரம் கோடி சொத்துக்களும் பல்லாயிரம் ஏக்கர் காணிகளும் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இவ்வாறு பல குற்றங்களை அவர் மீது திணித்தாலும் ஒரு குற்றத்தையும் காழ்ப்புணர்வு கொண்ட இனவாதிகளால் நிரூபிக்க முடியவில்லை. ரிஷாட் பதியுதீனை எதுவும் செய்ய முடியாததால் சதிகாரர்கள் கவலை கொண்டனர். ரிசார்ட்டை வீழ்த்துவதற்கு தருணம் பார்த்துக் காத்திருந்த சதிகாரர்களுக்கு ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல் ஒரு காரணமாக அமைந்தது. பயங்கரவாதத் தாக்குதலுக்கு ரிஷாட் பதியுதீனின் தம்பிக்கும் தொடர்பு இருக்கின்றது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர், அதேபோல ரிஷாட் பயங்கரவாதிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர், அதேபோல் பயங்கரவாதிகளை விடுதலை செய்யச் சொல்லி ரிசார்ட் முப்படைத் தளபதியை வலியுறுத்தினார் என்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுகளை ரிஷாட்டிற்கு எதிராக சுமத்தி இவரை அரசியலிலிருந்து ஓரம் கட்டுவதற்காக இந்த சதிகாரர்களும் காழ்ப்புணர்வு கொண்ட கயவர்களும் முயல்கின்றன.

எப்போதெல்லாம் ரிசார்ட்டுக்கு எதிரான எதிர்ப்புகள் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் ரிஷாட்டிக்கான ஆதரவு மென் மேலும் அதிகரிக்கின்றது.

இலங்கை அரசியலில் முஸ்லிம்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் கிடைத்த மிகச் சிறந்த தலைவர் ரிசாட் பதியுதீன். அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் மீண்டு வருவதற்கு அரசியல் பிளவுகளுக்கு அப்பால் ரிஷாட்டிற்கு ஆதரவாக குரல் கொடுத்து ரிஷாட்டின் கருத்தை பலப்படுத்துவோம்.

 

Web Design by The Design Lanka