05 அரச நிறுவனங்களுக்கு இன்று பாராளுமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு » Sri Lanka Muslim

05 அரச நிறுவனங்களுக்கு இன்று பாராளுமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு

Contributors
author image

Editorial Team

05 அரச நிறுவன பிரதானிகளை இன்று பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இவ்வாறு ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெடிக்லோ கெம்பஸ் தனியார் நிறுவனம் தொடர்பில் குறித்த அறிக்கையை தயாரித்தல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்தார்.

இன்று காலை 10 மணிக்கு தெரிவுக்குழு கூடவுள்ளது.

முதலீட்டு சபை,இலங்கை வங்கி, மத்திய வங்கி,நிறுவனங்களை பதிவு செய்யும் பதிவாளர் அலுவலகம் ,உயர் கல்வியமைச்சு முதலான நிறுவனங்களை இது தொடர்பில் எழுந்துள்ள சந்தெகங்கள் தொடர்பில் விசாரிக்கதற்கு இவ்வாறு அழைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

3.6 மில்லியன் ரூபாவை இந்த நிறுவனத்திற்கு மட்டுமல்லாது இதனுடன் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்களில் தொடர்புபடுத்தியிருப்பதால் இது தொடர்பில் சகலரதும் விடயங்களை கேட்டறிந்து கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். (NF)

Web Design by The Design Lanka