முஸ்லிம்கள் மீதான சுய விமர்சனம் பாகம் -2 விஜேதாசவின் முஸ்லிம் விரோத பரப்புரைகள் » Sri Lanka Muslim

முஸ்லிம்கள் மீதான சுய விமர்சனம் பாகம் -2 விஜேதாசவின் முஸ்லிம் விரோத பரப்புரைகள்

vijaya

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

 யூசுப் பின் பரகத்


முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் பற்றிப் பேசும் போது சர்வதேச காரணிகள் உள்நாட்டு செயல்பாடுகள் என்ற தலைப்புகளில் ஆராயப்பட வேண்டி இருக்கின்றது. இதில் உள் நாட்டுக் காரணிகளைப் பற்றி மட்டும் நாம் இங்கு பேசுவோம்.

சர்வதேசக் காரணிகள்

1.இனவாதத்திற்கான சர்வதேச பின்னணியை முஸ்லிம் சமூகம் இனம் கண்டு கொள்ள வேண்டும். குறிப்பாக 1905 ஆண்டு யூத பயங்கரவாதத்தின் இரகசிய அறிக்கை (Pசழவழஉழடள-புரோட்டோகால்ஸ்) பற்றியும் முஸ்லிம்கள் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

2.உலகலாவிய ரீதியில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தனிமைப்படுத்தலும் கொச்சைப் படுத்தலும்.

3.இஸ்லாமிய நாடுகளை பிளவுபடுத்தி முஸ்லிம்களின் வலிமையையும் வளர்ச்சியையும் பலயீனப்படுத்தும் திட்டம்.

4.இஸ்லாமிய நாடுகளில் கைப்பொம்மை ஆட்சியாளர்களை உருவாக்கி அவர்களில் ஊடாக இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் உலகரங்கில் முடமாக்கல்.

5.முஸ்லிகள் சிறுபான்மையாக வாழ்கின்ற நாடுகளில் அவர்களுக்கு எதிராக பெரும்பான்மையை வெறுப்புக் கொள்ள வைத்தலும் ஏவிவிடலும்.

6.இஸ்லாத்தின் – முஸ்லிம்களின் பெயரில் போலி அமைப்புக்களை சர்வதேச மட்டங்களில் உருவாக்கி இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் வேலைத்திட்டம்.

7.சர்வதேச ஊடகங்களை மொத்தமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இஸ்லாத்திற்கு எதிரான பரப்புரைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றமை.

8.உலகளவில் முஸ்லிம்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள்.

9.முஸ்லிம்கள் மத்தியில் இயக்க மோதல்களை உருவாக்கி அவர்களைக் கொண்டே அவர்களை அழித் தொழித்தல்.

10.இஸ்லாமிய சமயக் குழுக்களிடையே நிழவுகின்ற முரண்பாடுகள்.

உள் நாட்டுக் காரணிகள்

1.பெரும்பான்மை இனம் முஸ்லிம்கள் மீது ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற அச்ச உணர்வும் பிழையான தகவல்களும். அதனைக் களைய சமூகம் ஆற்ற வேண்டிய பணிகள்.

2.அடுத்து இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தினரின் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும்

நமது சமூகம் விடுகின்ற தவறுகள்.

தேசிய உணர்வும் தேசியப் பற்றும்

தேசியம் என்று வருகின்ற போது இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்களவர்கள் தமிழர்கள், முஸலிம்கள், மலேயர், பறங்கியர், வேடர்கள் என்று அனைவரும் இலங்கையர்களே. ஆனால் இந்த தேசிய உணர்வுகளை வெளிப்படுத்துவதில் ஒருமித்த போக்கு இனங்களிடையே நாட்டில் இல்லை என்றுதான் தெரிகின்றது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் சிலரது செயல்பாடுகள் ஏதோ நாம் அன்னிய நாட்டுக்காரர் என்ற தோரணையில்தான் அமைந்திருக்கின்றது.

குறிப்பாக கிரிக்கட் போட்டிகள் நடைபெறுக்கின்ற போது இந்த உணர்வுகளை பெரும்பான்மை இனத்தவர் தேனையுடன் அவதானித்து வருகின்;றார்கள் பேசுகின்றார்கள். நம்மில் சிலர் பார்க்கின்ற இந்தக் காரியங்கள் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அன்னியர்கள்-துரோகிகள் என்று பெரும்பான்மை இனம் தீர்மானிக்க இது ஏதுவாக அமைகின்றது.

இன நல்லுறவைப் பேணுதல்

பல்லின சமூகங்கள் மத்தியில் வாழ்கின்ற போது குறிப்பாக சிறுபான்மையினராக வாழ்கின்ற போது பிற சமூகங்களுடன் நாம் நல்லுறவைப்பேணும் வகையில் நமது செயல்பாடுகளை கையாள வேண்டி இருக்கின்றது. ஆனால் எமது பல நடவடிக்கைகள் அந்த சமூகங்களை கோபத்திற்கும் ஆத்திரத்திற்கும் ஆளாக்கும் வகையில் அமைந்திருப்பதைப் பல சந்தர்ப்பங்களில் பார்க்க முடிகின்றது. அவற்றை இப்போது பின் வரும் தலைப்புக்களில் பார்க்கலாம் என்று எதிர் பார்க்கின்றோம்.

சுற்றாடல்

நமது சமூகத்தினர் செரிவாக வாழ்கின்ற இடங்களில் சுற்றாடலையும் பொரும்பான்மையினர் செரிவாக வாழ்கின்ற இடங்களில் சுற்றாடல்களையும் ஒரு முறை எண்ணிப்பாருங்கள். நமது குடிமனைகள் வர்த்தக நிலையங்கள் ஒரு ஆக்கிரமிப்பு செயல்பாட்டை காட்சிப்படுத்துகின்றது. பிரதான வீதியின் நடுவில் கூட கூறை போடும் அளவிற்கு அது அமைந்து காணப்படுகின்றது. அதே நேரம் பக்கத்தில் உள்ள பேரினத்து சமூகத்தின் குடிமனைகள் வர்த்தக நிலையங்கள் சுற்றாடலையும் சூழலையும் கண்ணியப்படுத்துகின்ற வகையில் அமைந்திருக்கின்றன.

நமது பிரதேசங்களில் கழிவு நீர் வெளியேற்றம் வடிகால் அமைப்பு ஒழுங்கு அடுத்தவருக்கு இடைஞ்சலான வகையிலும் சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் வகையிலும் அமைந்து காணப்படுகின்றது. ஆனால் பெரும்பான்மையினர் செரிவாக வாழ்கின்ற இடங்களில் கழிவு நீரும் வடிகால் அமைப்பும் எங்கு செல்கின்றது என்று தெரியாத அளவுக்கு வெளியேற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றது. என்பதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகின்றோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக நமது குடிமனைகளில் அன்றாடம் சேருகின்ற குப்பைகளைக் கையாள்வதற்குக் கூட நமக்கு ஒரு ஒழுங்கு முறை இல்லை. நமது பிரதேசங்களில் சேர்கின்ற குப்பைகளை நம்மவர்கள் அதிகாலையில் அல்லது இரவு நேரங்களில் எடுத்துச் சென்று பொது இடங்களில் குறிப்பாக பிரசமூகத்தினர் வாழ்கின்ற இடங்களில் வீசி எறிவதை நாம் பரவலாக பார்க்க முடியும். இந்த செயலை எவரும் பொறுத்துக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ மாட்டார்கள் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான செயல்பாடுகள் கூட எதிர்காலத்தில் ஒரு வன்முறைறையைக் கொண்டு வரும் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பொது இடங்களில் நமது சமூகத்தினர் சேர்கின்ற போது இந்த இடத்தின் சுற்றாடலை அசிங்கப்படுத்துகின்ற வகையில் நடந்து கொள்வதை பரவலாக அவதானிக்க முடிகின்றது.

மேலும் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள பொது இடங்களை குறிப்பாக சிற்றோடைகள் போன்ற இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை அமைத்துக் கொள்வதில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதிக்கின்றர்கள் நம்மவர்கள். இதனால் முஸ்லிம் பிரதேசங்களில் ஒரு சின்ன மழைக்குக் கூட வெள்ளம் பெருக் கெடுப்பதை நாம் பக்கத்துக் கிராமங்களில் காண்கின்றோம்.

நமது சமூகத்தினர் வாழ்கின்ற பிரதேசங்களின் சுற்றாடலையும் நமக்குப் பக்கத்தில் உள்ள பிர சமூகத்தினர் வாழ்கின்ற பிரதேசங்களின் சுற்றாடலையும் ஒரு முறை எண்ணிப் பாருங்கள். அவற்றைப் பேணுவதிலும் சுத்தமாக வைத்திருப்பதிலும் அவர்கள் காட்டுகின்ற அக்கரை எம்மிலிருந்து எவ்வளவு தூரம் வேறுபடுகின்றது மாற்றமாக இருக்கின்றது.?

நமது பிரதேசங்களில் தாவரங்களை அழிப்பதிலும் மரங்களை வெட்டிச் சாய்ப்பதில் நாம் ஆர்வமாக இருக்கின்றோம், அதே நேரம் பெரும்பான்மை சமூகத்தினர் அவற்றை வளர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் ஆர்வமாக இருந்து வருகின்றார்கள். இஸ்லாம் சொல்கின்ற பசுமைச் சுழலை அழிக்கின்ற சமூகமாக நாம் இருக்க அவர்கள் அதனை பாதுகாப்பவர்களாக இருந்து வருகின்றார்கள். அப்படியாக இருந்தால் கலிமாவைச் சொல்லாவிட்டாலும் அவர்கள் நாம் சொல்கின்ற விவகாரங்களில் இஸ்லாத்தை கடைப்பிடிப்பவர்களாக இருந்து வருகின்றார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியுமல்லவா?

இந்த வகையில் பார்க்கின்ற போது இஸ்லாம் சொல்கின்ற சுத்தம் சுற்றாடல் பற்றி நாம் எந்த கவனமும் செலுத்தவில்லை என்பதனை நமது சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

வாகனங்களைக் கையாள்வது தொடர்பாக

அத்துடன் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள பாதைகளில் முஸ்லிகள் தமது வாகனங்களைக் கையாள்வதில் அடுத்தவர்களுக்கு பெரும் இடைஞ்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தி வருகின்றார்கள். இதனால் முஸ்லிம் பிரதேசங்களைத் தாண்டிச் செல்கின்ற பிற சமூகத்தினர் தினம் தோரும் நமது சமூகத்தினருக்கு தூசன வார்த்தைகளில் திட்டிக் கொண்டும் ஏசிக் கொண்டும் செல்கின்ற நிலை இருந்து வருகின்றது.

குறிப்பாக வெள்ளிக் கிழமை நாட்களில் பள்ளி வாயில்களின் முன்னால் நிறுத்தப்படுகின்ற பெரும் தொகையான வாகனங்கள் அடுத்தவர்களுக்கு இடைஞ்சலாக அமைந்திருப்பதுடன், நமது சமூகத்தினர் மீது பொறாமையையும் வெறுப்பையும் கொள்ள வைக்கின்றது. இது பற்றிய மாற்று நடவடிக்கைகள் தொடர்பாகவும் நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. குறிப்பாக நமது சமூகத்தில் முச்சக்கர வண்டிகளை பாவிப்போர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டி இருக்கின்றது.

இந்த விவகாரமும் ஒரு ஆக்கிரமிப்பு சமூகம் போல் அல்லது அடுத்தவனுக்கு தொந்தரவு கொடுக்கின்ற ஒரு சமூகம் போல் முஸ்லிம்களை காட்சிப்படுத்துகின்றது. எனவே நமது சமூகம் வாகனங்களைக் கையாள்வதில் ஒரு கட்டுக்கோப்பை பின் பற்ற வேண்டி இருக்கின்றது. இதற்கு நாமே ஒரு வீதி ஒழுங்கை கையாள முடியும். அத்துடன் முஸ்லிம் சமூகத்தினர் தமது வாகனங்களை செலுத்தும் போது வீதி ஒழுங்குகளை பின்பற்றுவதில் அக்கரை காட்டாதவர்களாகவும் தன்னலப் போக்குடையவர்களாகவும் இருக்கின்றனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இடங்களில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவோர் சட்டத்தை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகின்றது.

பழக்க வழக்கங்கள்

இப்போது நமது பழக்க வழக்கங்களைப் பற்றி சற்றுப் பார்ப்போம். வைத்திய சாலைக்கு நமது பெண்கள் செல்கின்றார்கள் என்று எடுத்துக் கொள்வோம். அங்கு வைத்தியரைச் சந்திக்கின்ற இடத்திலோ அல்லது மருந்து கொடுக்கின்ற இடத்தில் ஒரு நீண்ட கிவ் வரிசை இருக்கின்றது என்று எடுத்துக் கொண்டால், பிறசமூகத்தினர் நாங்கள் முறை வரும் வரை இந்த வரிசையில் முறையாக நின்று கொண்டிருப்பார்கள் ஆனால் நமது தாய்மாரோ எதையுமே கண்டு கொள்ளாது இடையில் பலாத்காரமாக நுழைந்து குறுக்கு வழியில் முன்னே செல்ல முயற்சிக்கும் காட்சிகளை நாம் அவ்வாறான இடங்களில் பரவலாக பார்க்க முடியும். அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் காரணமான வரிசையில் முறையாக நிற்பவர் சமூகத்திற்கு ஏசுவதையும் திட்டுவதையும் அங்கு பார்க்க முடிகின்றது.

அத்துடன் அரசாங்க நிறுவனங்களில் தமது காரியங்களை துரிதமாக அல்லது முறைகேடாக செய்து கொள்வதற்கு இலஞ்சத்தை வழங்குவதிலும் நம்மவர்களே முன்னணியில் இருந்து வருகின்றார்கள்.

வார்த்தைப்பிரயோகம்

நாம் அன்றாடம் உபயோகிக்கின்ற வார்த்தைப் பிரயோகங்கள் பற்றிப் பார்ப்போம். அடுத்தவரை மதிப்பளிக்காத வகையிலே நாம் வார்த்தைகளைப் பிரயோகித்து வருகின்றோம் நாட்டின் முதல் மனிதனைக் கூட அவன் இவன் என்று பேசுகின்றோம். அதே நேரம் நமது சமூக அரசியல் வாதிகளுக்கு மட்டும் அவர் இவர் சேர் டிபார் என்றெல்லாம் மரியாதையுடன் வார்த்தைகளை உபயோகிக்ன்றோம்.

இது ஒரு மனித நேயம் இல்லாத நமது இனவாத செயல்பாடு. மேலும் நமது பிரதேசத்தில் ஒரு பிறசமூகத்தை சேர்ந்த அதிகாரி அல்லது வைத்தியர் சேவையாற்றுகின்றார் என்று எடுத்துக் கொள்வோம். அவருக்கு அவன் வந்துவிட்டானா அவன் இருக்கின்றானா என்று பேசுகின்ற நாம், அதே நேரம் அவர் நமது சமூகத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தால் அவரை மரியாதையுடன் விளித்துப்பேசுகின்றோம். ஆனால் அதே நேரம் பெரும்பான்மை சமூகத்தினர் அந்த அதிகாரி எந்த இனத்தவராக இருந்தாலும் மரியாதையான வார்த்தைகளுடன் அவரை விளித்துப்பேசுவதை நாம் பார்க்க முடியும்.

வர்த்தகம்

இந்த நாட்டில் வியாபாரத்துறையை எடுத்துக் கொண்டால் அதிலும் நம்மவர்கள் நம்பகத் தன்மையாக நடந்து கொள்வதில் ஏமாற்று களப்படம் மட்டு மல்லாமல் பணக் கொடுக்கல் வாங்கல்களில் கூட ஏமாற்றும் சமுகமாக நாம் பார்க்கப்படுகின்றோம. நமது சமூகத்தினரின் காசோலைகள் கூட நம்பகத் தன்மை அற்றது என்றுதான் பிரசமூகத்தினர் கருதுகின்றார்கள். அத்துடன் பணமோசடி விவகாரங்களில் சர்வதேச மட்டத்தில் பல கிரிமினல் வேலைகளைப் பண்ணிவிட்டு நம்மவர்கள் பலர் இன்னும் வெளி நாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றார்கள்.சிலர் திட்டமிட்டு பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த செயல்பாடுகளும் நமது சமூகத்தின் மீதான நல்லெண்ணத்தை கடுமையாகப் பாதிக்கச் செய்துள்ளது.

சமூக இஸ்லாமிய விரோத செயல்பாடுகள்

தலைநகரில் முஸ்லிம்கள் செரிவாக வாழ்கின்ற இடங்கள் பாதாள மற்றும் போதை வியாபரம் நடக்கின்ற மத்திய நிலையங்கள் என்ற நிலை காணப்படுகின்றது.

அத்துடன் இன்று நாட்டிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் போதைப் பொருள் பாவிக்கின்ற- பரிமாறுகின்ற மைய இடங்களாக மாறிவருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த உறுப்படியான நடவடிக்கைகளை முஸ்லிம் சமூகம் மேற்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இதனால் நமது சந்ததியினர் போதைக்கு அடிமையாகி ஒட்டுமொத்த சமூகமும் விரைவில் சீரழிந்து போகும் நிலை.

நாட்டில் சமூக விரோத செயல்களை செய்பவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது என்பதனை விட அவர்கள் இஸ்லாமிய சீருடைகளுடன் இவற்றைப் புரிந்து மாட்டிக் கொள்வதால் அங்கு ஒட்டுமொத்த சமூகமும் சமயமும் விமர்சனத்திற்கு ஆளாகின்றது.

இஸ்லாமிய சீருடையும் கலாச்சாரமும்

இஸ்லாமியர்களின் சீறுடை விவகாரத்தை எவரும் விமர்சிக்க முடியாது. என்றாலும் அந்த சீறுடைகளுடன் நம்மவர்கள் பார்க்கின்ற காரியங்களும் சீருடையை உபயோகிக்கின்ற முறைமையும் இன்று கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றது என்பதனை முஸ்லிம் சமூகம் புரிந்து கொண்டு அதன் புனிதத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் வழி முறைகள் தொடர்பாகவும் தனது கவனத்தை செலுத்த வேண்டி இருக்கின்றது.

சமயக் கடமைகள்

முஸ்லிம்கள் தமது சமயக் கடமைகளை நிறைவேற்றுக் கொள்கின்ற போது குறிப்பாக நோன்பு உழ்ஹியாக கடமைகளை நிiறு செய்யும் போது அரச சட்டவரம்புகளையும் பிர சமூகத்தினரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில் தமது இஸ்லாமியக் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

மனித நேயம்

பல்லின சமூகத்தினருடன் முஸ்லிம்கள் கலந்து வாழ்கின்ற போது தாம் வாழ்கின்ற சுற்றாடலிலிலுள்ள பிரசமூகத்தினருடன் மனித நேயத்துடன் நடந்து கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இது நமது சமூகத்தின் மீதான நல்லெண்ணத்தையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தும்.

ஆடம்பர வாழ்க்கை

இஸ்லாம் எளிமையான வாழ்க்கை முறையை போதிக்கின்ற போது நமது சமூகத்தினர் இன்று ஆடம்பர வாழ்க்கை முறையை பின்பற்றுவதில் மிகுந்த ஆக்கரை காட்டி வருகின்றார்கள். பல விவகாரங்களில் இது விரலுக்குத் தகுந்த வீக்கமாகத் தெரிய வில்லை. இது கூட பிரருக்கு தம் மீது பொறமையையும் எரிச்சலையும் ஏற்படுத்தும்.

நாம் இஸ்லாமியர்களா?

நாட்டில் சமூகவிரோத செயல்களை பண்ணிக் கொண்டும் அடுத்தவர்களுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டும் வாழ்கின்ற நாம் எப்படி இஸ்லாமியர் அல்லது முஸ்லிம்கள் என்று நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.? எனவே இது விவாரத்தில் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்றுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

விஜேதாசவின் முஸ்லிம் விரோத பரப்புரைகள்

விஜேதாச ராஜபக்ஷ தொடர்ந்தும் முஸ்லிம்களுக்கு எதிராக தனது இனவாதக் கருத்துக்களைக் கக்கி வருவதை நாம் நெடுநாளாகப் பார்த்து வருகின்றோம். தென் கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்பாக அவர் தற்போது வெளியிட்டு வருகின்ற கருத்துக்கள். அதனை முஸ்லிம்களின் பிடியிலிருந்து பறித்தெடுக்கின்ற ஒரு ஆரம்பகட்ட நடவடிக்கை என்று நாம் சமூகத்தையும் பெறுப்பு வாய்ந்தவர்களiயும் எச்சரிக்கை செய்கின்றறோம். இன்னும் சில நாட்களில் அவர் தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தை ஜிஹாதிகளின் முகாம் என்று அடையாளப்படுத்தினாலும் நாம் ஆச்சர்யப் படுவதற்கு எதுவும் இருக்காது.

விஜேதாசவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள்!

எது எப்படி இருந்தாலும் பெயர் ஊர் சொல்லி அவர் அடித்துக் கூறி இருக்கின்ற விடயங்களில் உள்ள உண்மைத் தன்மை பற்றியும், பேராசிரியர் இஸ்மாயில் மற்றும் ஹாலிக் தொடர்பாக சொல்லி இருக்கின்ற கருத்துகள் பற்றியும் தேடிப்பார்க்க வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு இருக்கின்றது.

விஜேதாச அபான்டத்தை சொல்லி இருக்கின்றார் என்றால் அவர் மீது குறிப்பிட்டவர்கள் சட்ட நடவடிக்கைகள் எடுக்க இதுவரை முயலாதிருப்பது ஏன் என்றும் சமூகம் கேள்ளி எழுப்ப வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

Web Design by The Design Lanka