ஹிஸ்புல்லாவின் வழமையான அரசியல் விளையாட்டுக்கள் ஆரம்பம் » Sri Lanka Muslim

ஹிஸ்புல்லாவின் வழமையான அரசியல் விளையாட்டுக்கள் ஆரம்பம்

hisbullah

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

haaris Ali uthuma

தோழர் ஹிஸ்வுல்லாஹ்வின் அரசியலை தொடர்ச்சியாக நீங்கள் அவதானித்து வந்தீர்களானால் புரியும்.

ஜனாதிபதியோ, பிரதமரோ பலமாக இருக்கின்ற வரையிலும் அவர்களுடன் கைகோர்த்து அபிவிருத்திகளை செய்வதும்(பாதை அமைத்தல்,கட்டடம் கட்டுதல்)அவர்கள் பலவீனமாக அல்லது தோல்வியடையப் போகிறார்கள் எனும் போது அவர்களை விட்டு விலகி புதியவர்களை நாடுவதைம் அவரது வழமையான விளையாட்டுக்களாகும்.

அவர் உட்பட நமது சோனக அரசியல் வாதிகள் அனைவரும் பதவியில்லாமல் பொலிஸ் பாதுகாப்பு இல்லாமல் அரசியலில் இயங்கவே மாட்டார்கள். ஹிஸ்வுல்லாஹ் உட்பட எல்லா அரசியல் வாதிகளும் உரிமை அரசியல் செய்வதற்கோ அல்லது உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கோ எவ்வித லாயக்கும் அற்றவர்கள்.

இனி இவர்களால் அபிவிருத்தியையும் கூட செய்ய முடியாது. சிங்களவர்களுடைய நாட்டில் நமது ஊரும் நமது வீடுமே நமக்கு சொந்தமில்லை என்கின்ற போது எங்கே அபிவிருத்திகளை மேற் கொள்வது!

இனி இவர்கள் எல்லாம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தேவைப்படமாட்டார்கள். இவர்கள் எல்லாம் தங்களது பழைய சங்கங்களை கலைத்து விட்டு புதிய தலைவர்களிடம் (இளைஞர்கள்) சமூகத்தை ஒப்படைக்க வேண்டும்.

தொடர்ந்து பதவி வகிக்க ஆசைப்படுவார்களேயானால் அவமானப்படுத்தபட்டு சமூகத்தால் வெளியேற்றப்படுவாரகள். வரலாறு முன்னோக்கியே ஓடும்.

Web Design by The Design Lanka