சிங்கப்பூரைவிட 17 வருடங்களுக்கு முன்பே சுதந்திரம் பெற்ற இலங்கை » Sri Lanka Muslim

சிங்கப்பூரைவிட 17 வருடங்களுக்கு முன்பே சுதந்திரம் பெற்ற இலங்கை

IMG_20190610_084230

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Jamsaath

ஆக்கிரமிப்பு காலங்களில் பசியும் பட்டினியுமாக இருந்த சிங்கப்பூர் ஆக்கிரமிப்புக்குப் பின் வெறும் விவசாயத்தில் மட்டும் தங்கியிருந்த மக்களை வைத்து என்ன செய்வது என்று திண்டாடிக்கொண்டிருந்தது.

“லீ” யின் திட்டமிடலில் அமெரிக்க, ஜப்பானிய முதலீட்டாளர்களை சிங்கப்பூருக்கு வரவைக்கும் திட்டம் தீட்டப்பட்டது. விவசாயம் மட்டுமே தெரிந்த மக்களுக்கு தொழிநுட்பங்களை கற்றுக்கொடுக்கும் திட்டத்தை அமெரிக்க, ஜப்பான் முதலீட்டு நிறுவனங்கள் மூலம் சாதித்துக் காட்டினார் லீ. சிறந்த பதவிகளுக்கு தகுதி பெறாதவர்களை சுற்றுலா துறைக்கு பயன்படுத்தினார் லீ.

கைத்தொழில், தொழில்நுட்பம், மருத்துவம் என சிங்கப்பூரின் முன்னேற்றம் அனல்பறக்கும் வேகத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. தன்னை ஆக்கிரமித்த பிரித்தானியாவைவிட பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் பலமடங்கு முன்னிலைக்கு வந்தது.

மூன்றாம் உலக நாடுகளில் இருந்த சிங்கப்பூர் உலகின் முதல் தர நாடாக ஆகியது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒருவர் எமது நாட்டுக்கு வரமாட்டாரா என்று வழிமேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறது ஐரோப்பாவும் அமெரிக்காவும், அரபு நாடுகளும். இதுபோதாதட்கு தமது நாடுகளுக்கு “ஆன் அரைவல்” விசா வசதியை செய்து கொடுத்துள்ளது சிங்கப்பூர் வாசிகளுக்கு.

சிங்கப்பூர் இவ்வளவு முன்னேறக் காரணம் அரபு நாடுகளைப் போல பெட்ரோலோ, தென்னாபிரிக்கா போல தங்க சுரங்கமோ அதட்கு இருப்பது அல்ல. மாறாக அங்கு மனிதன்தான் அதன் வளமாக இருந்தது, மனிதனுக்கு அங்கு கொடுக்கப்பட்ட பெறுமானம்தான் அந்த நாட்டை தூக்கி நிறுத்தியுள்ளது. அங்கு முஸ்லிம், கிறிஸ்தவர், ஹிந்து, நாஸ்திகர் என பல நம்பிக்கையுள்ளவர்கள் நிம்மதியாக வாழ்கின்றனர், எல்லோரும் சேர்ந்தே சிங்கப்பூர்.

சிங்கப்பூரைவிட 17 வருடங்களுக்கு முன்பே சுதந்திரம் பெற்ற இலங்கை இன்னும் முட்டையில் மயிரு பிடுங்கும் தொழிலை செய்துகொண்டுள்ளது. அடுத்தவன் உடுத்தும் ஆடைக்கு சட்டம், அடுத்த மதத்தின் சாடைக்கு ஒரு சட்டம் என்று நாட்டை அதலபாதாளத்துக்கு கொண்டு சென்றுகொண்டுள்ளது.

முதலீட்டுக்கு வந்தவனையும் ஓட ஓட விரட்டுகிறது, உதவிக்கு வந்தவனையும் ஓட ஓட விரட்டுகிறது. சோனாமிக்கு கொடுத்த வீடுகளையும் மதப் பிரச்சினையாக்கியது, கல்விக்கு கொடுத்த கெம்பஸையும் இனவாதமாக மாற்றியது.

இலங்கை பாஸ்போர்ட்டை கண்டால் காறித்துப்பாததை மாத்திரம் சர்வதேசம் நமக்கு செய்யவில்லை, மற்ற எல்லாம் நடந்து முடிந்தாகிவிட்டது. ஒரு பாஸ்போர்ட்கூட ஒழுங்கா வடிவமைக்காத இந்தியனுக்கு கட்டாரில் “ஒன்லைன்” விசா இருக்கு, ஆனால் இலங்கைக்கு இல்ல.

தென்னாசியாவே அண்ணார்ந்து பார்க்கும் கட்டிடம் உள்ள இலங்கை உலகம் தலைகுனிந்து பார்க்கும் நிலைக்கு தற்போதைய அரசியல் தலைமைகள் இட்டு சென்றுள்ளனர்.

Web Design by The Design Lanka