தவ்ஹீத் ஜமாத் பேரில் 10 கோடி ரூபா பணம் பறிக்க முயன்ற மூவர் கைது » Sri Lanka Muslim

தவ்ஹீத் ஜமாத் பேரில் 10 கோடி ரூபா பணம் பறிக்க முயன்ற மூவர் கைது

IMG_20190610_091059

Contributors
author image

Editorial Team

தம்மைத் தீவிரவாத தவ்ஹீத் ஜமாத்தின் முக்கியஸ்தர்கள் என அச்சுறுத்தி, தம்புள்ள ரஜமகா விகாரை மற்றும் அங்கியங்கும் கோயிலின் பொறுப்புதாரி ராகுல தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிங்கள சமூகத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு குறித்த பௌத்த துறவியை கடந்த சில தினங்களாக அச்சுறுத்தி இவ்வாறு பணம் பறிக்க முயன்றுள்ளதுடன் அவரைக் கொலை செய்யப் போவதாகவும் மிரட்டி வந்துள்ளனர்.

பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரின் பெயரில் பதிவாகியுள்ள சிம் கார்டே தொலைபேசி அழைப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, இப்பாதக செயலைச் செய்த மூவரும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என தம்புள்ள பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கொள்ளையர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதோடு மேலதிக விசாரணைகளை தம்புள்ள பொலிஸ் தலைமையகம் மேற்காண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka