பதில் அமைச்சர்கள் மூவர் நியமனம் » Sri Lanka Muslim

பதில் அமைச்சர்கள் மூவர் நியமனம்

IMG_20190610_144634

Contributors
author image

Editorial Team

பதில் அமைச்சர்கள் மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

நகர திட்டமிடல், நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன நகர திட்டமிடல், நீர்வழங்கல், உயர்கல்வி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 தொழிற்றுரை பிரதியமைச்சர் புத்திக பத்திரண தொழிற்றுரை, வர்த்தக அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்நத்வர்களை மீள்குடியேற்றல், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி பதில் அமைச்சராகவும் பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதின், கபீர் ஹாசீமின் அமைச்சு வெற்றிடங்களுக்கே பதில் அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

IMG_20190610_144634

Web Design by The Design Lanka