ஹிஸ்புல்லாஹ்! நீங்கள் மௌனம் காப்பதே மகா சிறந்தது! » Sri Lanka Muslim

ஹிஸ்புல்லாஹ்! நீங்கள் மௌனம் காப்பதே மகா சிறந்தது!

hisbullah

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Azeez nizardeen

ஹிஸ்புல்லாஹ் உங்களது அரசியலில் எங்களுக்கு விமர்சனங்கள் இருந்த போதும், உங்களுக்கெதிராக இனவாதிகள் கிளர்ந்தெழுந்த போது அந்த இனவாதிகளுக்கெதிரான நிலைப்பாட்டையே சமூகம் எடுத்தது.

அதன் அா்த்தம் நீங்கள் மனிதர்களில் புனிதமானவா் என்பதல்ல. நீங்கள் குற்றம் ஏதுமற்றவா் என்பதுமல்ல.

உங்கள் அரசியல் நடவடிக்கைகளில் சமூகத்திற்கு நன்மையையும் சிலபோது தீமைகளும் கிடைத்திருக்கின்றன. அவற்றை விபரிக்க இது தகுந்த நேரமுமல்ல.

காத்தான்குடி போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களில் இருந்து கொண்டு உங்களால் வீராய்ப்பு பேச முடியும். உங்களின் வீராய்ப்பு பேச்சுக்கு உங்கள் ஊரில் இருந்து கொண்டு துள்ளிக்குதித்து “விசில்” அடிப்பவர்களை மட்டும் பார்க்காதீர்கள். இந்நாட்டில் வாழும் ஏனைய முஸ்லிம்கள் தொடர்பாகவும் கொஞ்சம் கரிசனை எடுங்கள்.

உங்களின் அண்மைய பேச்சுக்கு இனவாத பௌத்த பிக்குகள் எதிர்வினையாற்ற ஆரம்பித்து இருக்கின்றார்கள்.

உங்களின் அந்த பேச்சுகள் நாட்டில் நாலா பக்கங்களிலும் சிதறி வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை உங்களால் உணர முடியாதுள்ளது.

இன்று இனவாதிகளின் பல குற்றச்சாட்டுகள் உங்கள் காத்தான்குடியையும், கிழக்கு மாகாணத்தையும் மையமாக வைத்தே கிளப்பப்படுகின்றன.

எரியும் அந்த இனவாதத்தின் வெப்பத்தில் நாட்டின் அனைத்து பிரதேசங்களில் வாழ்கின்ற அப்பாவி முஸ்லிம்களின் உள்ளங்களும் கருகிக்கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்கள் நாளுக்கு நாள் அச்சத்திலும், பீதியிலும், அவநம்பிக்கையிலும் புதைந்துக் கொண்டிருக்கின்றார்கள்.

உங்கள் வீராய்பு பேச்சுகளுக்கு கொஞ்சம் விடை கொடுங்கள். விபரீதத்தை உணருங்கள். தவறுகளை உணருங்கள்.

நீங்கள் கடந்த காலங்களில் செய்த, தற்போது செய்துகொண்டிருக்கின்ற காரியங்களுக்கு முழு முஸ்லிம் உம்மத்தும் இன்று குறி வைக்கப்படுகிறது என்பதை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்.

Web Design by The Design Lanka