பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ளல் அவசியம் » Sri Lanka Muslim

பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ளல் அவசியம்

acju

Contributors
author image

எம்.எல்.பைசால் (காஷிபி)- Qatar

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பல விடயங்களை நாட்டு மக்களின் நலன் கருதி முதன்மையாக இருந்து செயற்பட்ட போதிலும் பிறையினைத் தீர்மானித்தல் மற்றும் அதனை உத்தியோக பூர்வமாக மக்களுக்கு அறிவித்தல் போன்ற செயற்பாடுகளை கொழும்பு பெரிய பள்ளியுடன் இணைந்தே மேற்கொள்கின்றது .

இந்நிலையில் அண்மையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நோன்புப் பெருநாள் பிறை பற்றி அறிவித்த செய்தி கொழும்பு பெரிய பள்ளியுடன் இணைந்து கருத்துப் பரிமாறாமல் வெளியிடப்பட்டதாகவே பிந்திய முன்னெடுப்புகள் மூலம் காணக்கிடைக்கின்றது .

பொறுப்பு வாய்ந்த இரு சபைகளும் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இச்செயற்பாடுகள் எமக்கு கற்றுத்தருகின்றன .

முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பானவர்கள் யார் ? அதற்கு தலைமை வகிப்பவர்கள் யார் ? என்ற அதிகார ரீதியான போட்டியாக இப்பிரச்சினை மாறியுள்ளதாகவே தோன்றுகின்றது .
சென்ற காலங்களில் கைகலப்பில் பிறையினைத் தீர்மானிக்கும் விடயங்கள் முடிவுற்றுள்ளதை இவ்விடத்தில் நினைவுக்கு உட்படுத்தலாம்.

இந்நிலை எதிர்காலத்தில் தொடரும் போது அனைத்து கிராமங்களும் தனித்தனியாக பிறையினைத் தீர்மானித்து விடையங்களை முன்னெடுக்க வேண்டிய கசப்பான நிலை உருவாக வழிவகுக்கும்.

உரியவர்கள் கவனத்தில் எடுத்து கொள்ளட்டும்

Web Design by The Design Lanka