சோதனைச் சாவடிகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் » Sri Lanka Muslim

சோதனைச் சாவடிகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்

IMG_20190611_134651

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Irham cegu dawood


பெருநாள் விடுமுறை கழித்து நேற்றிரவு காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி வந்தேன்.

பயணத்தினிடையே நாவலடியிலும் ஹபரணயிலும் இராணுவத்தின் இரு சோதனைச் சாவடிகள் அமைந்திருந்தன.

குறித்த இரு இடங்களிலும் அனைவரும் பேரூந்தைவிட்டு இறங்கி தத்தமது பயணப்பொதிகளுடன் சோதனை நடத்தப்படுமிடத்துக்கு நடந்துசெல்ல வேண்டும். (பெண்கள், நோயாளிகள், கைக்குழந்தையுடன் உள்ள தாய்மார்கள் போன்றோர் அவ்வாறு இறங்காதிருப்பதை ஓரளவுக்கு நியாயப்படுத்தலாம்)

பலர் இறங்கி நடந்தனர். அவர்களுள் ஒருசில வயதுமுதிர்ந்த பெண்களையும் காணமுடிந்தது.

ஆனால், ஒருசில ஆண்கள் அப்படியே பேரூந்தினுள் இருந்துகொண்டனர்.

பேரூந்துக்குள் சோதனையிட வந்த இராணுவ வீரனிடம் அவர்கள் ஏதேனும் சாக்குப்போக்குகளைச் சொல்லியிருக்க வேண்டும்.

அல்லது ‘மேதாவித்தனமாக’ ஏதாவதோர் அடையாள அட்டையைக் காண்பித்திருக்க வேண்டும்.

ஆனால், குறித்த பேரூந்து, ஹோட்டல் ஒன்றில் நிறுத்தப்பட்டபோது அந்த திடகாத்திரமான ஆண்களுள் ஒருசிலர் ப்ளேன்டி குடிப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு இறங்கிச் சென்றதை அவதானிக்க முடிந்தது. (ஒருசிலர் இயற்கைக் கடன்களைக் கழிப்பதற்காகவும் இறங்கிச் சென்றிருக்கலாம்)

எது எவ்வாறிருப்பினும், சோதனைச் சாவடிகளில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள் நமதும், நாட்டினதும் பாதுகாப்புக்காகவே என்பதை நாம் உணரத் தலைப்பட வேண்டும்.

பயணங்களின் போது முடியுமானவர்கள் அவற்றுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதை நினைவூட்டுவதற்காகவே இதனை இங்கு பதிவிடுகிறேன்.

சிந்தித்துச் செயற்படுவோம்.

Web Design by The Design Lanka