கலாச்சார சகிப்புத்தன்மை ஏற்படாதவிடத்து... » Sri Lanka Muslim

கலாச்சார சகிப்புத்தன்மை ஏற்படாதவிடத்து…

IMG_20190611_141213

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Anees shariff


பாரம்பரிய முஸ்லிம்கள் எனும் சொல்லாடலை அதிகமான முஸ்லிம் விரோத இனவாதிகள் பயன்படுத்துகின்றமை இன்று நம்நாட்டில் ஒரு பேஷன் ஆகிவிட்டது.

இது உண்மையென்றால் இந்த நாட்டிலே பாரம்பரிய தமிழர்கள் மற்றும் பாரம்பரிய சிங்களவர்கள் என்போருடன் நவீன தமிழர்கள் மற்றும் நவீன சிங்களவர்களும் இருக்கின்றார்கள் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

காரணம் ஏறத்தாள 30-40 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் நடை, உடை, பாவனை, உணவுப் பழக்கங்கள் என்பன போன்ற எல்லா விடயங்களிலும் இன்று மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

முஸ்லிம் சமூகம் எவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளின் அரபுக் கலாச்சாத்தினை உள்வாங்கிக் கொண்டதோ அதே போன்று தமிழ் மற்றும் சிங்கள சமூகங்கள் மேற்கத்திய கலாச்சாரத்தினை உள்வாங்கிக் கொண்டுள்ளன.

உதாரணமாக 1980களின் நடுப்பகுதியில் நாம் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற போது முஸ்லிம் மாணவிகள் அத்தனை பேரும் ஒன்றில் சாரி அணிந்தார்கள் அல்லது சர்வார் உடுத்தார்கள்.

இன்று பல்கலைக்கழகத்தில் ஹபாயா அணியாத முஸ்லிம் மாணவிகளை காணமுடியாது. மறுபுறமாக சாரி அல்லது பாவாடை சட்டை அணிந்து வந்த தமிழ் மற்றும் சிங்கள மாணவிகளில் அநேகர் இன்று இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் ரீ சேர்ட் அணிய ஆரம்பித்து விட்டனர்.

இதனை உலகமயமாக்கலின் ஒரு விளைவாகவே நாம் பார்க்க வேண்டுமே தவிர ஒரு போதும் இதற்கு நாம் இனவாத மற்றும் மதவாத சாயங்களை பூசவேண்டிய அவசியம் இல்லை.

கலாச்சார சகிப்புத்தன்மை ஏற்படாதவிடத்து ஒரு பல் இன மத, மொழி மற்றும் கலாச்சார சமூகங்களில் ஒரு போதும் அமைதி மற்றும் சமாதானம் என்பவற்றை நாம் கட்டியெழுப்ப முடியாது.

Web Design by The Design Lanka