ஊடகங்கள் திட்டமிட்டு வளர்க்கும் இனவாதம் » Sri Lanka Muslim

ஊடகங்கள் திட்டமிட்டு வளர்க்கும் இனவாதம்

media

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Nawfeer atham lebbe


பொய்களைப் பரப்பும் போது ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு எழுதுகின்றன. இந்த தேசத்தின் ஒற்றுமை, நல்லிணக்கம் என்பன பற்றிக் கணக்கிலெடுக்காமல், அவரவரின் ஊடகத்தின் உரிமையாளர்களின் அஜந்தாக்களுக்கு ஏற்ப இயங்குகின்றன. தொலைக்காட்சிகள் செய்திகளைத் தயாரித்து பாமர மக்கள் மத்தியிலே எண்ணெய் ஊற்றுகின்றன.

எந்த விஞ்ஞான உண்மையுமின்றிச் செயற்படுகின்றன. கடந்த வருடம் அம்பாரை உணவகத்திலே கொத்துரொட்டியிலே கருத்தடை மாத்திரை (வந்தபெதி) கலந்த செய்தி, அண்மைய டொக்டர் ஷாபிக்கு எதிரான ஒற்றைக் குற்றச் சாட்டு என்பன எந்த உண்மையையும் விஞ்ஞானபூர்வமாக விளக்க வேண்டி நிற்கின்ற செய்திகளாகும்.

இவற்றை ஊடகங்கள் கிராம மட்டத்திலே நன்கு பேசு பொருளாக ஆக்கி இனரீதியிலே செய்திகளைத் தயாரித்து ஒளிபரப்புகின்றன.

சில காலம் சென்றதும் இவை பற்றிய அரச பரிசீலனைகள், ஆய்வுகளின் பின்னர் இவை வெறும் வாய்க் கதைகள், இவற்றை நிருபிக்க முடியாத பொய்கள் என்று நிரூபிக்கின்றார்கள். இந்த இறுதி அறிக்கைகள் பற்றிய உண்மைச் செய்திகள் எந்த ஊடகங்களிலுமே பெரிதாக வெளியிடப் படுவதில்லை. அவை சொன்ன செய்தியாக பாமர மக்கள் மனங்களில் தொடர்ந்தும் நிலை பெற்று இனங்களுக்கிடையிலான குரோதமும், வெறுப்பும் வளர்ந்தே வருகின்றன.

Web Design by The Design Lanka