கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை! » Sri Lanka Muslim

கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை!

FB_IMG_1560259918027

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று கூறவில்லை, அவரது கொள்கைகள் என்னவென்று பார்க்க வேண்டும்.

எமது மக்கள் எதிர்பார்ப்பது ஒரு சிறந்த பலமான தலைவரை அதேபோன்று இந்நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தலைவரை. இந்த பலம் கோட்டாபய ராஜபக்சவிடம் இருக்கிறது.

ஆனால் முஸ்லீம் மக்களிடத்தில் அவர் குறித்து விமர்சனம் இருக்கிறது. அந்த விமர்சனங்களை இல்லாமல் செய்வது அவரது பொறுப்பாகும், அந்த விமர்சனம் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் இருக்கும் என கருதவும் முடியாது.

எதிர்காலத்தில் நாம் கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை!

இந்த நாடு பௌத்த நாடு அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் ஏனைய மதங்களையும் கௌரவிக்க வேண்டும் அதே போன்று அவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

-ரவூப் ஹக்கீம்-

Web Design by The Design Lanka