இந்த ஒற்றுமை நெடுநாள் நீடிக்குமா? » Sri Lanka Muslim

இந்த ஒற்றுமை நெடுநாள் நீடிக்குமா?

FB_IMG_1560251069710

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Saboor adem


மிகவும் ஓர் இக்கெட்டான சந்தர்ப்பத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். இந்த ஒற்றுமை நெடுநாள் நீடிக்க வேண்டும் என்பதே பலருடைய பிரார்த்தனை.

நவீன அரசியல் போராட்டம் பல்வேறு சிக்கல்களையும் அபாயங்களையும் கொண்டது. அந்த அபாயங்கள் குறித்த அறிவு எமக்கு இந்த சூழ்நிலையில் மிக அவசியமானது. ஆயுதப் போராட்டத்தை விட அபாயகரமானது அரசியற் போராட்டம். ஆயுதப் போராட்டத்தில் வென்றவர்கள் கூட அரசியற் போராட்டத்தில் வீழ்ந்திருக்கின்றனர். இதற்கு நல்ல உதாரணங்கள்தான் ஈராக் மற்றும் எகிப்து போன்ற நாடுகளின் நிலை.

ஒரு நாடு அல்லது ஒரு சமூகம் தனித்து நிற்பது தற்கால அரசியலில் மிகவும் கடினமானது. இந்நிலையில் சர்வதேசத் தலையீடும், பிராந்தியத் தலையீடும் அரசியற் போராட்டத்தில் தவிர்க்க முடியாதவை. தமிழ், சிங்கள, முஸ்லிம் நலன்கள், பிராந்திய வல்லரசான இந்தியாவின் நலன், சர்வதேச வல்லரசான அமெரிக்கா கீழைத்தேய உலகில் அடைய விரும்பும் நலன் இவை அனைத்தும் ஒன்றொடொன்று கலந்து முரண்பட்டு நிற்கும் நிலையே இப்போதைய இலங்கையின் அரசியல் சூழல். இலங்கை படிப்படியாக பிராந்திய, சர்வதேச சக்திகளின் விளையாட்டுக் களமாக மாறிவிட்டுள்ளது.

கொள்கைவாத அரசியற் போராட்டம் நவீன உலகில் மிகக் கடினமானது. அதில் நிலைத்து நிற்க ஆழ்ந்த தூய்மையும், உறுதியான கொள்கைப் பற்றும் மிக அவசியம். அரசியல் வியாபாரமாகி விட்ட காலமிது. ஆட்சியை பின்னால் நின்று இயக்குவது பெரும் பண முதலாளிகள். பணம் தண்ணீராக அரசியற் களத்தில் இறைக்கப்படுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் சீடர்கள் தங்களுடைய அரசியல் தலைவரை புகழ்பாடுவதும், துதிபாடுவதும், ஏனையவர்களின் தலைவரை இளக்காரம் செய்வதும் அறியாமையின் உச்சம். இவ்வாறான அனுகுமுறை மீண்டும் முஸ்லிம் சமூகம் அரசியல் போராட்டத்தில் ‘சைபர்’ நிலைக்கு இறங்கிவிட காரணமாகிவிடும்.

கட்சித் தொண்டர்கள் அரசியல் ரிதியாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

Web Design by The Design Lanka