தமிழ் முஸ்லிம் நல்லுறவின் அரசியல் புவியியல் » Sri Lanka Muslim

தமிழ் முஸ்லிம் நல்லுறவின் அரசியல் புவியியல்

JAYAPALAN

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தமிழ் முஸ்லிம் நல்லுறவின் அரசியல் புவியியல்.
.
இனங்களுக்கிடையிலான நல்லுறவு இராஜதந்திரத்தில் சிக்கலான பகுதி பெரும்பாலும் புவியியல் சார்ந்ததாகும். இதற்க்கு இலங்கையும் புறநடையில்லை.

தமிழர் முஸ்லிம்களுக்கிடையிலான நல்லுறவு சிக்கலில் அரசியல் புவியியல் பிரச்சினைகளே பெரும்தடையாக உள்ளது. அவை
1. கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவு நெருக்கடிகள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களால் மேலும் தீவிரபட்டுள்ளது.
2. முஸ்லிம்கள் நிலதொடற்ச்சியற்ற ஊர் பிரதேசங்களில் வாழ்வது. முஸ்லிம்களைப் பொறுத்து அம்பாறை மாவட்டத்தில் அதிக நில தொடர்பு அமைந்துள்ளது. ஆனால் தமிழர் நிலத்தொடர்பு குறைந்துள்ளது.
3. கல்முனை தெற்க்கு தமிழ் பிரதேச சபை சிக்கல் இன்னும் முழுமையாகத் தீராத பகுதியாக உள்ளது. எனினும் மூதூர் பிரதேச சபை பகிர்வே எதிர்கால புவியியல் மோதல் புள்ளியாகவும் உள்ளது.
.
அரசியல் சார்ந்து தமிழரும் முஸ்லிம்களும் மாகாண மட்ட மாவட்ட மட்ட சிந்தனையில் இருந்து விடுபட்டு த்ம் தம்து ஊர்கள் சார்ந்த இன அலகுகள் மட்டத்தில் சிந்திக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இப்புதிய சூழல் உருவானதற்க்கு வடகிழக்கு இணைப்பு அடிப்படையிலான சமரச தீர்வு தோற்றுப்போனதே காரணம்.

இலங்கையின் இன மதப்புவியியல் த்விர்க்க முடியாத வகையில் சீன செல்வாக்கு மண்டலமாகவும் இந்தியா மேற்குலக அணிகளதும் செல்வாக்கு மண்டலமாகவும் பிழவுபட்டு வருகிறது. கண்டிய சிங்களவர் மத்தியிலும் கரையோர சிங்களவருர் மத்தியிலும் தமிழர் மலையக தமிழர் மத்தியிலும் இந்த செல்வாக்கு மண்டலம்பற்றிய புரிதலும் நிலைபாடும் ஓரளவுக்கு தெளிவாகி வருகிறது. முஸ்லிம்கள் நிலைபாடு பற்றி அனுமானிக்க முடியவில்லை. ஹிஸ்பில்லாவின் அண்மை பேச்சு மூன்றாவது செல்வாக்கு மண்டலம் பற்றி குறிப்பிடுகிறது. ஆனால் நடைமுறையில் மூன்றாவது செல்வாக்கு மண்டல அரசியலுக்கான வாய்ப்புகள் இன்னும் உருவாகவில்லை என்றே தோன்றுகிறது.
.
அன்றில் இருந்து இன்றுவரை தமிழ் முஸ்லிம் உறவை நிர்ணயிப்பதில் அம்பாறை மாவட்ட தமிழர் நலன்கள் முக்கிய இருந்து வருகிறது என உறுதியாகச் சொல்ல முடியும். அதுபோல முஸ்லிம்களைப்பொறுத்து மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் நலன்கள் தமிழ் முஸ்லிம் நல்லுறவை தீர்மாளிக்கும் முக்கிய அடிப்படையாக உள்ளது. இதனை தமிழரும் முஸ்லிம்களும் உணர்தல் வேண்டும்.

எதிர்காலத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் சிந்தித்து பொறுப்புடன் கையாள வேண்டிய சிவப்பு பகுதிகள் இரண்டு. அவை 1. கல்முனை 2. மூதூர் பிரதேச செயலகப் பிரிவுகள் ஆகும். எனவே தமிழ் முஸ்லிம் நல்லுறவை விரும்புகிறவர்கள் இந்த இரண்டு சிக்கல்கலையும் சுமூகமாக விடுவிப்பது தொடர்பாகா ஆய்வுக் கருத்துக்களை உருவாக்க முன்வரவேண்டும்.
.

1987ல் இருந்தே வடகிழக்கு இணைப்பு தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக இந்தியாவும் மேற்க்கு நாடுகளும் ஏற்றுக்கொண்ட ஏற்பாடாகவே உள்ளது. பிரச்சினையாக உள்ளது. அதன் அடிப்படையிலேயே 1987ல் இந்திய படைகளின் வரவு ஏற்பட்டது. திருகோணமலையில் சிங்கள குடியேற்றங்கள் இந்திய நடவடிக்கையால் அகற்றபடுதல் ஆரம்பித்தது. புலிகள் இந்தியாவை ஏற்காதமையே வடகிழக்கு இணைப்புக்கு முதல் ஆப்பாக அமைந்தது. எனினும் 2006ல் ஜெனீவா பேச்சுவ்வார்த்தையை முறித்து மேற்க்கு நாடுகளையும் புலிகள் பகைக்கும்வரை மேற்க்கின் அழுத்தத்தை மீறி இலங்கை அரசினால் வடகிழக்கு இணைப்பை துண்டிக்க முடியவில்லை. இதுதான் சர்வதேச நிலைபாடுகளின் வரலாறு.
.
புலிகள் 2006ல் மேற்குடனும் பகைத்தபின்னர் வடகிழக்கு இணைப்பு துண்டிக்கபட்டது. இன்று நிலமை வேறு. இந்தியாவும் மேற்க்கு நாடுகளும் தமிழர் கூட்டமைப்பும் யு.என்.பியும் சேர்ந்து வடகிழக்கில் சீனா பாகிஸ்தான் எந்த வகையிலும் தலையிடாதவாறு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இது நீண்டகால தன்மைகொண்ட ஏற்பாடாகும்/
.
ஒருவேளை தீர்ட்வுத் திட்டத்தில் இந்தியாவும் மேற்குலகமும் விலகி இருந்து 13வது திருத்த அடிப்படையை நிர்பந்திக்காத சூழலில் உருவாகலாம். அத்தகைய சூழலில் புதிய தீர்வுப் பொதி உருவாகும். புதிய தீர்வுப்பொதி வடக்குடன் இணையாத வடகிழக்கு முஸ்லிம் வட்டார அலகுகளும் வடக்குடன் இணைந்த வடகிழக்கு தமிழ் வட்டார அலகுகளும் என அமையும் வாய்ப்புகளே உள்ளது. இத்தகைய சூழல் உருவானால் முஸ்லிம் அலகுகள் நிபந்தனைகளின் அடிப்படையில் தமிழருடனோ சிங்களவருடனோ இணைய வாய்ப்பு உருவாகும். அல்லது சிங்கள அரசின் போராடி இணக்கத்தை பெற்று நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணமாக மேம்படவும் வாய்புள்ளது.
.
முஸ்லிம் அலகுகளும் தமிழ் அலகுகளும் மாவட்ட அதிகாரப் பகிர்வோடு இணையும் தீர்வுப்பொதியே இரு தரப்புக்கும் கிடைக்கக்கூடிய சிறந்த தீர்வுப் பொதியாக அமையும் என்பது எனது நம்பிக்கை. எனினும் முஸ்லிம்கள் அலகுகள் சுதந்திரமாக எடுக்கும் எந்த தீர்வையும் நான் ஆதரிப்பேன்.

Web Design by The Design Lanka