அறபு மொழி அகற்றல் விவகாரம்.. » Sri Lanka Muslim

அறபு மொழி அகற்றல் விவகாரம்..

IMG_20190612_062611

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அண்மைய முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளில் ஒன்றாக தேசிய மொழிகள் தவிர்த்த ஏனைய மொழிகளினாலான பெயர் பலகைகள் மற்றும் விளம்பரங்கள் என்பவற்றை அகற்றுவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

இவ்வறிவிப்பானது நமது சமூக உரிமை மற்றும் விழுமியங்களில் தாக்கம் செலுத்துமா என்பது தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு நமது சமூகத்தின் புத்திஜீவிகளை சாரும்.

தொடர்ச்சியான எதிர்பாராத எதிர்ப்புகளால் அரசியல்வாதிகள் உட்பட அனைத்து சாராரும் களைப்படைந்துள்ள நிலையில் இந்த அறபு மொழி தொடர்பான சுற்றறிக்கை வெளிவருகிறது.

அறபு மொழியை பெயர் பலகைகளில் பொதுச்சொத்துக்களில் அல்லது அரச அலுவலகங்களில் பயன்படுத்துவதற்கான தடை அறிவிப்பு என்றால் பிரச்சினை பாரதூரமாக இருக்காது ஆனால் அறவே அறபு மொழிப்பாவனை தடை என்பது ஆபத்தான விடயமாகும் மாத்திரமின்றி சட்டரீதியாக கேள்விக் குற்படுத்தக்கூடிய விடயமாகும்.

1956 தனிச்சிங்கள மொழி சட்டத்தின்மூலம் பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செல்வாக்கை பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் தூக்கி நிறுத்தினார். ஆனால் பல்லின மக்கள் வாழும் நாட்டில் இச்செயற்பாடானது பிரிவினைக்கு வழிகோரும் என்பதால் அடுத்து வந்த அரசாங்கங்களால் தளர்த்தப்பட்டது. இருப்பினும் அந்த விடயம் “concept” இன்னும் பெரும்பான்மை சமூகத்தின் அடக்கியாளும் கொள்கைக்குள் வேர்விட்டுள்ளதை இன்னும் காணக்கூடியதாக உள்ளது.

மொழிகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை (UNESCO) தெளிவான கொள்கை விளக்கங்களை உறுப்பு நாடுகளிடையே வெளியிட்டுள்ளது. தனது ஆறு 06 பாவனை மொழிகளில் ஒன்றாக அறபு மொழியை கொண்டு ஐக்கிய நாடுகள் செயல்படும்
நிலையில் குறிப்பிட்ட ஒரு மொழியை தடைக்குற்படுத்தும் அதிகாரம் இலங்கை அரசிற்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறி..

இருப்பினும் இஸ்லாமியர்களின் வேத நூலான புனித அல்-குர்ஆன் அறபு மொழியிலேயே அருளப்பட்டது. அதன் மொழிபெயர்ப்புகள் இருந்தாலும் கூட அறபு மொழியில் அதனை ஓதுவதே சிறப்பு. அறபு மொழி தெரியாதவர்கள் கூட அல்-குர்ஆனை ஓதுவதற்காக மாத்திரமாவது அறபு மொழியை சிறுவயதிலேயே கற்றுக்கொள்கின்றனர். இது ஒரு அடிப்படை விடயம்.

எனவே வரவிருப்பது அறபு மொழித்தடையா அல்லது காட்சிப்படுத்தல் தடையா என்பது தெரியவில்லை. ஆயினும் அறபு மொழி தடை என்பது பாரிய பிரச்சினைகளை தொற்றுவிக்கும்.

இறுதியாக அந்த பேச்சிக்கே இடமில்லை என்று தைரியமாக கூறும்

ஏ. ஆர். மபூஸ் அஹமட்

Web Design by The Design Lanka