ஜனாதிபதித் தேர்தல்; முஸ்லிம் தலைமைகள் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? » Sri Lanka Muslim

ஜனாதிபதித் தேர்தல்; முஸ்லிம் தலைமைகள் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்?

election

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சி வேட்பாள‌ரை ஆத‌ரிப்ப‌தாலோ அல்ல‌து கோட்டாப‌ய‌ அல்ல‌து வேறு எவ‌ரையும் ஆத‌ரிப்ப‌தாலோ முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு விடிவு ஏற்ப‌டாது என்ப‌தை முஸ்லிம் ச‌மூக‌ம் புரிந்து கொள்ள‌ வேண்டும்.

த‌னி ஒரு ம‌னித‌ன் மீது அல்ல‌து த‌னி ஒரு க‌ட்சி மீது ப‌க்தி வைப்ப‌து மூட‌ ந‌ம்பிக்கையாகும். எப்ப‌டித்தான் யார் ஆட்சிக்கு வ‌ந்தாலும் பின்ன‌ர் சிங்க‌ள‌ இன‌வாத‌த்துக்கு அடிமையாகி விடுவ‌தை காண்கிறோம்.

ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் யாருக்கு ஆத‌ர‌வ‌ளிப்ப‌தாக‌ இருப்பினும் ப‌ண‌ம், ப‌த‌விக‌ளை விடுத்து முஸ்லிம் ச‌மூக‌த்தின் தேவைக‌ளை ப‌கிர‌ங்க‌ ஒப்ப‌ந்த‌ம் செய்து கொள்ள‌ அதிகார‌த்தில் உள்ள‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் ஒற்றுமையாக‌ முய‌ற்சிக்க‌ வேண்டும். அத்த‌கைய‌ ஒப்ப‌ந்த‌ம் மீற‌ப்ப‌ட்டால் என்ன‌ செய்வ‌து என்ப‌தையும் ஆராய‌ வேண்டும்.

ஜ‌னாதிப‌தி தேர்த‌ல் ப‌ற்றி ஆளுக்கொரு க‌ருத்துக்க‌ளை தெரிவித்துக்கொண்டிராம‌ல் அனைத்து முஸ்லிம் க‌ட்சிக‌ளும் ஒன்றிணைந்து அனைத்து முஸ்லிம் கூட்ட‌மைப்பை ஏற்ப‌டுத்தி க‌ல‌ந்துரையாட‌ வேண்டிய‌து அவ‌சிய‌மாகும்.

பொறாமை, எரிச்ச‌ல், அவ‌ர் ந‌ல‌ன் அடைந்து விடுவார், அவ‌ரை பெரியாள் ஆக்குவ‌தா என்ற‌ சின்ன‌த்த‌ன‌ங்க‌ளை ஒதுக்கிவிட்டு முஸ்லிம் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளின் த‌லைமைக‌ள் ஒன்றாக‌ பேச‌ வேண்டும். அத‌ன் பின் அத‌ற்கு பொறுப்பான‌ ஊட‌க‌ பேச்சாள‌ர் ம‌ட்டுமே ஊட‌க‌ங்க‌ளுக்கு க‌ருத்து தெரிவிக்கும் வ‌கையில் உட‌ன‌டியாக‌ அர‌சிய‌ல் க‌ட்ட‌மைப்பை ஏற்ப‌டுத்த‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் எடுக்கும் ப‌டி உல‌மா க‌ட்சி வேண்டுகோள் விடுக்கிற‌து.

Web Design by The Design Lanka