ஹிஸ்புல்லா நாளை சாட்சியமளிப்பு » Sri Lanka Muslim

ஹிஸ்புல்லா நாளை சாட்சியமளிப்பு

hisbu

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நடைபெற்றுவரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வின் போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் ஜயம்பதி விக்கிரத்ன தெரிவித்தார்.

தெரிவுக்குழு விசாரணைகளின் 5 ஆவது நாள் விசாரணைகள், நாளை (13) முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் ஆகியோரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்றையத் தெரிவுக்குழு விசாரணைகளில் சாட்டியமளித்த மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி, 2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் சஹ்ரான் காசிம் ஹிஸ்புல்லாவுக்கு உதவிகளை வழங்கியிருந்தாக கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka