முஸ்லிம் பிரதிநிதிகள் அமைச்சுப் பதவிகளை ஏற்பார்களா? மறுப்பார்களா? » Sri Lanka Muslim

முஸ்லிம் பிரதிநிதிகள் அமைச்சுப் பதவிகளை ஏற்பார்களா? மறுப்பார்களா?

FB_IMG_1560251168784

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

குற்றம் சாட்டப்பட்டுள்ள எமது தலைமைகள் மீதான விசாரனைகள் முடிவுற்று தீர்ப்புகள் அறிவிக்கப்பட்ட பின்னரே மீண்டும் அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்பதா அல்லது சாதாரண எம். பிக்களாக தொடர்வதா என்பது பற்றிய முடிவுக்கு வரவேண்டும்,

மூன்று வாகனங்களும் நான்கு மேலதிக பாதுகாப்பு பந்தாவும் கிடைப்பதைவிட வேறு என்ன விஷேட அதிகாரங்களை பெற்று சமூகத்துக்கு தொண்டு செய்ய முடிந்தது என்பதை எடை போட்டு பார்க்க வேண்டும்.

சாதாரண உறுப்பினராக இருந்து மீதமுள்ள காலத்தின் பின் நடைபெறவுள்ள தேர்தலின் பின் புதிய முடிவுகளை எடுக்கலாம்.

சிலவேளை ஜனாதிபதி தேர்தல் முற்படுமாயின் யாருக்கு ஆதரவளிப்பதென்பது மிகுந்த சிரமமான தேர்வாக இருக்கும்.

ரணில் சார்பான வேட்பாளரை தோல்வியுறச்செய்யும் நோக்குடன் வடக்கு மாகாண சபையின் முன்னால் முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஐயா அவர்களும் களமிறங்க இருப்பதால் எம்து தேர்வு மிகத்துல்லியமானதாய் அமையவேண்டும்.

கடந்தகால அனுபவங்கள் எமக்கு ஒரு விடையத்தை தெளிவாக கற்றுத்தந்துள்ளன.
சிங்கள மேலாதிக்கவாதிகளை கட்டுப்படுத்தும் திராணியற்ற எந்த ஜனாதிபதியாலும் சிறுபாண்மையிருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்பதே உண்மையாகும்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடச்சாத்தியமானவர்கள் என்று இதுவரை முன்னிலைப்படுத்தப்படும் எந்த நபர்களும் சிங்கள மேலாதிக்கத்தை எதிர்த்து செயற்படக்கூடியவர்களாய் இல்லை என்பதும் அவர்களே விரும்பினாலும் செயற்பட முடியாது என்பதும் தெளிவான விடையங்கள்.

இந்நிலையில் சிறுபாண்மையான நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக உரையாட வேண்டும்.

சிங்கள மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவரும் சிறுபாண்மை மக்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தக்கூடிய நீதியானவர் என ஓரளவேனும் ஊகிக்கக்கூடிய ஒரு பௌத்த பிக்குவை புதிய வேட்பாளராய் முற்போக்கு சிந்தனைகொண்ட சிங்கள சிவில் அமைப்புக்களின் துணையுடன் அடையாளங்கண்டு வேட்பாளராக்கவேண்டும்.

காலஞ்சென்ற சோபித தேரர் மாற்றமொன்றை ஏற்படுத்தும் நோக்கில் தாமே ஜனாதிபதி வேட்பாளராய் முன்வந்த சந்தர்ப்பத்தை மைத்ரி என்ற அதிகார வெறி கொண்ட அரசியல்வாதிக்கு தாரைவார்த்தன் விளைவைத்தான் கடந்த நான்கு ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றோம்,

அதற்காக சோபித தேரர் ஜனாதிபதியாய் வந்திருந்தால் இந்த இனவாதிகளை அடக்கியிருப்பார் என்று சந்தேகங்களுக்கு அப்பால் சத்தியமிட்டு எவராலும் கூற முடியாது.

என்றாலும் அவர் என்ன செய்திருப்பார் என்று பார்க்கக்கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்துவிட்டோம் என்பதில் சந்தேகமில்லை.

எம்மை பொறுத்தவரை இந்த நாட்டின் அமைதியை கெடுப்போர் புத்த புக்குகளாய் இருக்குமட்டும் எவ்வளவு ஆளுமைமிக்க பிக்கு அல்லாத எந்த சிங்கள தலைவராலும் எதுவும் செய்யமுடியாது.

ஐ,நாவிலோ, உள்நாட்டிலோ புதிய புதிய சட்டங்களை இயற்றுவதால் மட்டும் எதையும் சாதித்து விட முடியாது.

சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகியாலேயே மியன்மாரின் அவலங்களை கட்டுப்படுத்த இயலவில்லையென்றால் தீவிரவாதப் போக்குடைய பௌத்த பிக்குகளின் உணர்வுத்தளங்களின் மேலாதிக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக, ஒரு நேர்மையான பௌத்த பிக்குவல்லாத எவர் அதிகாரத்துக்கு வந்தாலும் எந்த மாற்றத்தையும் இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் எதிர்பார்க்க முடியாது.

இந்த உளவியலை புரிந்து ஒரு நேர்மையானவனவரென நம்மால் ஊகிக்கக் கூடிய ஒரு ப் பௌத்த பிக்குவவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதில் ஆர்வம் காட்டுவதை பற்றியும் சிந்திப்போம்

சிலவேளைகளில் நாம் தெரிவு செய்யும் பௌத்த பிக்கு இதுவரை இருந்த ஜனாதிபதிகளில் மிக மோசமானவராகவும் மாறலாம்.

அல்லது மிக நீதமானவராகவும் காணலாம்.

சந்தேகங்களுக்கு அப்பால் தேர்வுகள் இல்லை

-வஃபா பாறுக்-

Web Design by The Design Lanka