ஹலால் விடயமும் ஏறக்குறைய அப்படித்தான் » Sri Lanka Muslim

ஹலால் விடயமும் ஏறக்குறைய அப்படித்தான்

muslim

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Adhroff sihabdeen


முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் அநேகமானவை நபரைக் கைது செய்து விட்டு முறைப்பாட்டைச் செய்யுங்கள் என்று அறிவிப்பது போல் ஒரு தினுசாகவே அமைந்திருக்கின்றன.

ஹலால் விடயமும் ஏறக்குறைய அப்படித்தான். ஹலால் உணவை உண்ணுமாறு முஸ்லிம்கள் யாரையும் வற்புறுத்தியது கிடையாது. ஹலால் சான்றிதழைப் பெற்றேயாக வேண்டும் என்று யாரையும் பலவந்தப்படுத்தியதும் இல்லை. நாங்கள் ஹலால் சாப்பிடுகிறோம் என்பது மட்டுமே சரியானது.

முஸ்லிம் நாடுகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் ஹலால் சான்றிதழ் பெறுங்கள் என்று கூடக் கேட்டுக் கொள்வதில்லை. அது இறக்குமதி செய்யும் நாட்டின் வேண்டுகோளே தவிர இலங்கை முஸ்லிம்களின் வேண்டுகோள் அல்ல.

இன்னார் மகளான இன்னாரை தங்களுக்கு சாட்சிகள் முன்னிலையில் ஹலால் மனைவியாக திருமணம் செய்து வைக்கிறேன் என்று திருமணத்தின் போதும் அதன் பிறகு பெரும்பாலும் மாமிச உணவு கொள்வனவின் போதுமே முஸ்லிம்களாகிய நாம் அநேகமாகவும் இந்த ஹலால் என்ற பதத்தை உபயோகிக்கப் பழகிக் கொண்டுள்ளோம்.

வாழ்வின் எல்லா அம்சங்களிலும் ஹலால் இணைந்தே இருக்கிறது என்பதை பதாகை வைத்து பட்டை கிளப்பி தஃவா செய்வோர் உட்பட நாம் அனைவருமே பொது வெளியில் தெளிவை வழங்கவும் பரந்த கலந்துரையாடலை நடத்தவும் தவறியிருக்கிறோம்.

இதே சொல்லையும் அது உள்ளடக்கியிருக்கும் அர்த்தத்தையும் பள்ளிவாசல் மிம்பரோடு நமக்குள்ளேயே பேசுவதுடன் நிறுத்திக் கொண்டோம்.

இவற்றையெல்லாம் சிந்திக்காமல் நம்மில் ஒரு சாரார் எங்கெங்கோ அறபுத்தேசங்களில் பிறந்த அறிஞர்களின் கருத்துக்களையும், கிலாபத்தையும், எழுச்சியையும் பேசிப் படங்காட்டிக் கொண்டிருக்கிறோம்!

Web Design by The Design Lanka