இந்த பாரியளவிலான மோசடி தொடர்பில் அம்பலப்படுத்துவேன் » Sri Lanka Muslim

இந்த பாரியளவிலான மோசடி தொடர்பில் அம்பலப்படுத்துவேன்

1536388992-sri-lanka-parliament-2

Contributors
author image

Editorial Team

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரொருவரால் முன்னெடுக்கப்படும் பாரியளவிலான கொள்ளை தொடர்பில், அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது அம்பலப்படுத்திவிட்டு, அரசியல் ரீதியில் தீர்மானமொன்றைத் தான் எடுக்கவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

“இவ்வாறானதொரு தீர்மானத்தை தான் எடுப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவளித்துள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளை (18), நாடாளுமன்றம் கூடும் போது, இந்த பாரியளவிலான மோசடி தொடர்பில் அம்பலப்படுத்துவேன், தன்னுடைய கட்சியின் அமைச்சராக இருந்தாலும், இந்த செயற்பாடுகளை தான் விரும்பவில்லை. அத்துடன் அவருடைய செயற்பாடுகளுக்கு எதிராக, நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Web Design by The Design Lanka