பெயரை குறிப்பிடும் உரிமை மஹிந்த ராஜபக்ஷவிற்கு மட்டுமே உண்டு » Sri Lanka Muslim

பெயரை குறிப்பிடும் உரிமை மஹிந்த ராஜபக்ஷவிற்கு மட்டுமே உண்டு

IMG_20190617_205021

Contributors
author image

Editorial Team

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை குறிப்பிடும் உரிமை மஹிந்த ராஜபக்ஷவிற்கு மட்டுமே இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

களுத்துறை, பயாகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் இதுவரையில் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தான் எப்போதும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka