மொஹமட் பவாஸ் எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில் » Sri Lanka Muslim

மொஹமட் பவாஸ் எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில்

IMG_20190618_214506

Contributors
author image

Editorial Team

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது மேல்மாகாண புலனாய்வு பிரிவு சந்தேகநபர் தொடர்பில் செய்யப்பட்ட விசாபரணை அறிக்கை வாழைத்தோட்டம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

குறித்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பான அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதன்படி சந்தேகநபரை எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை வழங்குவதற்கும் உத்தரவிட்டார்.

Web Design by The Design Lanka