முஸ்லிம்கள் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டுமாயின்.. ; தமிழ் சகோதரரின் அறிவுரை » Sri Lanka Muslim

முஸ்லிம்கள் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டுமாயின்.. ; தமிழ் சகோதரரின் அறிவுரை

muslim

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Pe Pirasha


சிங்கள பெளத்த பேரினவாதம் முஸ்லீம் மக்களை குறிவைத்துள்ளதானது முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு ஆழமாக புரியவில்லை என்பது மிக விரைவில் புரியவரலாம்.

பதவி ஆசைய்க்காக மீண்டும் அதிகாரத்தில் இணைந்தால் இதனை மீண்டும் கடும்போக்குவாதிகள் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டார்கள். இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவி மக்களே.

ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் பல அமைப்புக்களுக்கு அடிபணியாத சிங்கள பேரினவாதம் இந்த முஸ்லிம் கூட்டமைப்புக்கு அஞ்சசுமா என்ன?

ஏதாவது அழுத்தம் பிரயோகித்தால் அதிலிருந்து எவ்வாறு விடுபடலாம் என சிங்கள நரிதந்திர அரசியலுக்கு அத்துபடி.

முஸ்லிம் மக்கள் தங்கள் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டுமாயின் அது தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரு குடையின் கீழே சாத்தியப்படும்.

என்னடா இது சந்தர்ப்பத்தை பாவித்து தமிழர்கள் பக்கமாக இழுக்கிறார்களே என்று முஸ்லீம் தலைவர்கள் நினைப்பது பிழையில்லை. ஆனால் சாத்தியப்படகூடிய நிதர்சனம் இதுவே.

முஸ்லீம் மக்களுக்கும் தாங்கள் தமிழ்பேசும் இனம் என்ற ஆழமான சிந்தனை நிரந்தரமாக வரும்வரை சிங்கள தேசம் துரத்திக்கொண்டே தான் இருக்கும் என்பது தமிழர்கள் பெற்றுக்கொண்ட பாடம்.

சிந்திப்பது சிறந்தவர்களின் கடமை…….

Web Design by The Design Lanka