'ஷகி' யுடைய மரணச் செய்தி இன்னமும் அதிர்ச்சியாகவே இருக்கிறது - Sri Lanka Muslim

‘ஷகி’ யுடைய மரணச் செய்தி இன்னமும் அதிர்ச்சியாகவே இருக்கிறது

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Siraj Mashoor


அன்புச் சகோதரி திருமலை எம்.ஏ ஷகி யுடைய மரணச் செய்தியை எப்படித் தாங்கிக் கொள்வது? இன்னமும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

ஷகி,
ஏறாவூரில் நடந்த உங்களுடைய புத்தக வெளியீட்டில் கட்டாயம் நான் பேச வேண்டும் என்று கேட்டிருந்தீர்கள். வெளிநாட்டுப் பயணமொன்றை முடித்துக் கொண்ட கையோடு அப்படியே வந்து பேசினேன். உங்களது கவிதைத் தொகுப்பு சாகித்திய விருது கிடைப்பதற்குத் தகுதியானது என்று சொன்னேன்.
அதை விடவும் என்னால் என்னதான் செய்ய முடிந்தது?

உதவி கேட்க மிகவும் தயங்கியிருந்த உங்களுக்காக முகநூலில் உதவி கேட்டேன். பொதுவாக நான் இப்படி உதவி கேட்பது மிகவும் குறைவு. அதுவும் உங்களது தோழி சாபிறா கவிஞர் மஜீத் உங்களது கஷ்டங்களைச் சொன்னபோதுதான் நிலைமையின் தீவிரம் என்னுள் உறைத்தது.

அப்போது முகம் தெரியாத பலரும் நான் சற்றும் எதிர்பாராத வகையில் பெருமனங் கொண்டு உதவினார்கள். இப்போது அந்த உறவுகளுக்கு தீராத நன்றியை மீண்டும் சொல்கிறேன்.

கடைசியாக நீங்கள் அக்கரைப்பற்றுக்கு வந்தபோது, Mkm Shakeeb இடம் எனது புத்தகத்தை கொடுக்கச் சொல்லி தந்து விட்டுப் போனதும், ஊரில் உங்கள் வாப்பாவின் உறவுகளை நீண்ட இடைவெளிக்குப் பின் சந்தித்ததை மகிழ்ச்சியோடு நீங்களும் சாபிறாவும் சொன்ன காட்சியும்தான் கண் முன் நிழலாடுகிறது. இப்போது நீங்களும் இல்லை; மஜீதும் இல்லை.

ஷகி, நீங்கள் நம் மத்தியில் இல்லை என்பது எவ்வளவு பெருந்துயர்.
அல்லாஹ் உங்களைப் பொருந்திக் கொள்வானாக. உயர்ந்த சுவனத்தைத் தந்தருள்வானாக.

Web Design by Srilanka Muslims Web Team