அடுத்த கட்ட வேலைத் திட்டத்தின் பரப்புரைகள் » Sri Lanka Muslim

அடுத்த கட்ட வேலைத் திட்டத்தின் பரப்புரைகள்

gota

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mihad


அக்டோபர் அரசியல் சதிகாரர்களின் அடுத்த கட்ட வேலைத் திட்டத்தின் பரப்புரைகள் மீண்டும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் அவர்கள் செதுக்கிய கூழ் திட்டங்களான பாராளுமன்ற கலைப்பு, பயங்கரவாத கருவூட்டல், கலவரங்கள், கடை எரிப்புகள், முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரம் போன்ற அனைத்தும் புழுத்து நாற்றம் எடுத்து விட்டதினால் புதிய பொய் மூட்டை ஒன்றை அவிழ்க்க ஆயத்தமாகி இருக்கிறார்கள்.

அதுதான் அமெரிக்க தலையீடு எனும் அச்சமூட்டும் கதைகளை சோடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்றையதல்ல. அது பல தசாப்தங்களாக தொடர்கிறது. அமெரிக்காவோடு இங்கு ஆட்சி புரியும் இரண்டு தரப்புகளும் தொடர்ச்சியாக உறவை பேணியே வந்திருக்கின்றன.

ஆனால் இம்முறை அக்டோபர் அரசியல் சதிகாரர்களில் ஒரு பிரிவினர் திடீரென அமெரிக்க எதிர்ப்புக் கோஷம் ஒன்றை பிரபலப்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் மூலம் ரணில் அரசாங்கம் மட்டும் அமெரிக்க அடிமைகள் என்பது போலவும், அக்டோபர் அரசியல் சதிகாரர்கள் தேசப்பற்று மிக்க சுதேச மைந்தர்கள் போலவும் ஒரு போலியான தோற்றத்தை (simulated perception) கட்டமைக்கின்றனர். இது புலிகள் காலத்து தேர்தல் பிரச்சாரங்களில் மக்களை பயமூட்ட “சொப்பிங் பேக் ” உடன் ஓட வேண்டும் எனும் புரளி கிளப்பியதற்கு ஒப்பானது.

எதனையும் பகுத்து நோக்கத் தெரியாத விபரம் குன்றிய மக்களை அதிக ஆதரவாளர்களாக கொண்டிருக்கும் கட்சிகள் இந்த வகை விஷமப் பிரச்சாரங்களில்தானே ஈடுபட வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவுடன் முழுமையாக அடிமைப்பட்டுச் செயல்பட தயாராக தன்னை வளப்படுத்தி வருவது கூட்டு எதிரணிதான். இந்த விடயத்தில் அது தன்னை பல்வேறு முனைகளாக பிரித்து செயல்பட்டு வருகிறது.

பஸில் ஒரு புறம் தமிழ் மக்களோடு உறவுகளை உருவாக்க முடியுமா எனும் தந்திர திட்டங்களை சிந்திக்கிறார். தற்போதைய அரசாங்கத்தை செயலற்றது போல காண்பித்து தன்னை நிலை நிறுத்தும் முயற்சியில் மஹிந்த ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைப் பேணுவதற்கான பாதுகாப்புத் தந்திரோபாயங்களில் கோட்டாபய ஈடுபட்டிருக்கிறார்.

ஆனால் ரணில் அரசாங்கத்தின் மீது தேசத்துரோக விம்பம் ஒன்றையும், தமது ராஜபக்ஷ அணியின் மீது தேசப்பற்றாளர்கள் என்ற விம்பத்தையும் வழமை போல கட்டமைப்பதன் மூலமே அரசியல் வெளியில் mass popular ஆக தம்மை வடிவமைக்க முடியும். இந்த திட்டத்தின் உள்ளூர் நிகழ்ச்சி நிரலே “அமெரிக்க எதிர்ப்பு வாதம் “. இதனை ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் செய்ய மாட்டார்கள். இதற்கென கூலிக்கு மாரடிக்கும் சில அரசியல் அநாதைகள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். வாசு, அதாஉல்லா, விமல், கமன்பில்ல போன்ற உதிரிகளின் பணியிது.

ராஜபக்ஷ குடும்பத்தை அமெரிக்க அதிகார வர்க்கத்தோடு தொடர்பு படுத்தி இலங்கையை அந்நாட்டின் நிரந்தர அடிமையாக மாற்றுவதற்கான பணியினை மேற்கொள்ள சில comrader intellectuals நியமிக்கப்பட்டுள்ளார்கள். Path Finder எனும் நிறுவனத்தின் தலைவரான மிலிந்த மொரகொட இந்தப் பணிகளைச் செய்து வருகிறார். இதன் ஒரு அங்கமாகவே அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபேட் ஓ பிளேக் இங்கு வரவழைக்கப் பட்டிருந்தார். அவர் கோட்டாபயவை அதிகம் புகழ்ந்து ஊடகங்களை குஷிப்படுத்தியதன் மூலம் பொது எதிரணி எதனை நோக்கிச் செல்ல எத்தனிக்கிறது என்பதனை நாடு அறிந்து கொண்டது.

Web Design by The Design Lanka