இந்த இரண்டு தரப்புக்கும் இடையில் ஒரு கூட்டம் இருக்கிறது; இவர்கள் ஆபத்தானவர்கள் » Sri Lanka Muslim

இந்த இரண்டு தரப்புக்கும் இடையில் ஒரு கூட்டம் இருக்கிறது; இவர்கள் ஆபத்தானவர்கள்

IMG_20190703_073344

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Nakeeb


Hameeedia வில் ஆடை வாங்கிவிட்டு
KFC யில் சாப்பிட்டுவிட்டு Prado வில் பயணம் செய்யும் ஒரு 5 சதவீதமான சிங்களவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் யாரும் இனவாதம் குறித்து பேசுவதில்லை. அவர்களுக்கு அதற்கான நேரமும் இல்லை.

இன்னம் ஒரு அப்பாவி சிங்கள மக்கள்
கூட்டம் இருக்கிறது. அன்றாடம் தனது வருமானத்திற்காக
கஷ்டப்படுபவர்கள்.  அவர்களுக்கு பேஸ்புக் வட்சப் பற்றி எல்லாம் தெரியாது. மிஞ்சிப்போனால் ஒரு 1500 ரூபாவின் Nokia phone வைத்திருப்பார்கள். அதன் பெட்ரி கலன்டுவிடாமல் ஒரு Rubber Band போட்டிருப்பார்கள்.

இந்த அப்பாவி மக்களுக்கும்
இனவாதம் தெரியாது.
அவர்களது பிரச்சினைகள் எல்லாம் அன்றாடம் உணவுக்கு என்ன செய்வது என்பது மட்டும்தான்.

இந்த இரண்டு தரப்புக்கும் இடையில்
ஒரு கூட்டம் இருக்கிறது.

கஷ்டப்பட்டு உழைப்பார்கள்.
அழாகாக ஆடை அணிய முயற்சிப்பார்கள்.
வாகனம் வாங்க பணம் சேர்ப்பார்கள்.
ஒரு ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பார்கள்.
நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசையுடன் வாழ்க்கையில் போராடுவார்கள்.
ஆனால் வாழமாட்டார்கள்.

இவர்களில் இருந்துதான் இந்த சிங்கள இனவாதிகள் உருவாகிறார்கள்.

அரசியல்வாதிகளுக்குத் தேவையான
நடிகர்கள் இங்கு இருந்துதான் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

தாம் எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்காததற்கு
முஸ்லிம்கள்தான் கரணம் என்று நம்புகிறார்கள்.

தனக்குப் பிள்ளை கிடைக்காததற்கும் முஸ்லிம்களை குறை சொல்கிறார்கள்.

ஒரு வகையான தாழ்வுச் சிக்கலோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்தால் தமது சொத்துக்கள் பெருகிவிடும் என்று நம்புகிறார்கள்.

யாராவது ஒரு அரசியல்வாதியன் நிகழ்ச்சி நிரலுக்கு ஆடினால் தனக்கு வாழ்க்கையில்
முன்னேறிவிடலாம் என்று நம்புகிறார்கள்.

பாவம் இவர்கள்,  இவர்கள்தான் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்கள்.

Web Design by The Design Lanka