அப்படியெனில் முகம் மறைத்திருக்கும் அந்த கெளரவமான கோட்பாதர் யார்? » Sri Lanka Muslim

அப்படியெனில் முகம் மறைத்திருக்கும் அந்த கெளரவமான கோட்பாதர் யார்?

rob1

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Riza hazzen


போதைப்பொருள் கடத்தல் மாபியாக்களுக்கும் பயங்கரவாதத்துக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக கூறும் ஜனாதிபதி மைத்திரி விடுதலைப் புலிகளும் அதனோடு தொடர்புபட்டவர்கள் தான் என்பதைக் கூறியிருக்கிறார். நாட்டின் ஜனாதிபதி ஆதாரமற்றோ வரலாற்று அரசியல் தெளிவின்றியோ இப்படியெல்லாம் பேசமாட்டார்.

Drug trafficking இல் இலங்கையானது முக்கியமான Hub ஆக காலாகாலமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. நாட்டின் ஆட்சியாளர்களின் உச்ச அதிகாரத்தைக் கொண்டும் கட்டுப்படுத்த முடியா மிகப் பலம் வாய்ந்த நெட்வெட்க் இது. இதன் பின்னனி அச்சமூட்டக் கூடியதும் அபாயகரமானதுமாகும். சர்வதேச நாடுகளின் உளவு அமைப்புக்கள், உலகம் முழுதும் நற்பெயரெடுத்த மிகப் பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் தொட்டு குக்கிராமங்களில் பொட்டலம் போடும் உள்ளூர் சண்டியன் வரை Organized ஆனது. Drug trafficking, தீவிரவாதம், Money Laundering , ஆயுதக் கடத்தல் என இவர்கள் லாபம் பார்க்கும் சட்டவிரோதத் துறைகள் பல. இதனால் ஈட்டப்படும் பெரும் லாபம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அன்றாட பாவனைப் பொருள் ஆடம்பர பிராண்ட்கள், சேவைகளில் முதலீடு செய்யப்படுகிறது.

தங்குதடையில்லாத முறைப்படியான விநியோகத்துக்கும் வியாபார கொடுக்கல் வாங்கலுக்கும் இந்த மிகப் பெரிய வலையமைப்பானது அரசியலையும் தீவிரவாதத்தையுமே பயன்படுத்துகிறது. 80களின் தொடக்கத்தில் வேட்டைத் துப்பாக்கிகளையும் வங்கிக் கொள்ளைகளையுமே நம்பியிருந்த இலங்கையின் தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் இந்தியாவின் அனுசரனை கிடைத்ததும் நவீன ஆயுதங்களும், சீருடையுமாக வலம் வந்ததின் பின்னனி பிராந்திய அரசியல் அதிகாரம் என்றால் அதற்கும் பின்னாலுள்ளது இந்த போதைப் பொருள் கடத்தல் வர்த்தகம். பண்ணைகளில் ஒன்றாக இணைந்து செயற்பட்ட காலத்தில் இயக்கங்களில் காணப்பட்ட அரசியல் புரிதலும் கருதுகோள்களும் இந்தியாவின் அணுசரனையும் மிதமிஞ்சிய ஆயுதங்களும் கிடைத்ததும் காணாமல் போனது உண்மைக் கதை. ரோ ஊடாக இஸ்ரேலிடம் பயிற்சி பெற்ற TELO, LTTE, PLOTE போன்ற இயக்கங்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டமை இன்று முன்னால் போராளிகளாயே வெளிப்படுத்தப்படுகின்றது. PLOTE அமைப்பின் உள்நடந்த உட்பூசல்களைப் பேசும் புதியதோர் உலகம் நாவலும், சாத்திரியின் ஆயுத எழுத்தும் இது குறித்து பேசியிருக்கின்றன. இலங்கையின் இந்திய பிராந்திய அரசியலின் மறைமுக கோரமுகமான இதன் நீட்சியிலேயே இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியும் 91 இல் கொல்லப்பட்டார். 90 இன் துவக்கத்தில் புலம்பெயர் நாடுகளில் போதைப் பொருள் கடத்தலில் கைதாகும் 80% ஆனோர் இலங்கைத் தமிழர்கள் என Interpol தகவலை வெளியிட்டது. இதை உறுதிப்படுத்தும் இந்தியா டுடே புலிகள் அமைப்பானது உலகின் பலம் வாய்ந்த மாபியா கோட்பாதரான கொலம்பிய பப்லோ எஸ்கபாரின் Medellin Cartel அமைப்போடு வணிகத் தொடர்பிலிருந்ததாக கொலம்பியப் பத்திரிகை El-Tiempo மற்றும் Washington Post யையும் ஆதாரம் காட்டுகிறது. 90களின் பின்னர் பலம்வாய்ந்த மட்டுமல்ல செழிப்பான இயக்கமாகவும் புலிகள் அமைப்பு உருவெடுத்தது வரலாறு.

போதை பொருள் மாயியாக்களுக்கெதிரான ஜனாதிபதி மைத்திரியின் யுத்தத்தில் கடந்த டிசம்பர் 31 இல் 272Kg கொக்கைன் உடன் சேர்த்து மொத்தமாக 20மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான போதைப் பொருட்கள் சிக்குகின்றன.
பின்னர் கொழும்பு கொள்ளுபிட்டியில் 294 கிலோ கொக்கைன் மாட்டுகிறது.
இலங்கை வரலாற்றில் சிக்கிய மிகப்பெரிய பொட்டலங்கள் இவை.

பெப்ரவரி 5 இல் இலங்கையின் போதைப்பொருள் பாதாள உலக மாபியாவின் கோட்பாதரெனக் கூறப்படும் மதுஸ் டுபாயில் கைது செய்யப்படுகிறார்.

போதைப் பொருளுக்கெதிரான ஜனாதிபதியின் போரில் கிடைத்ததெல்லாம் வெற்றிகள் தான். இன்னொரு பக்கம் இலங்கையின் இறைமைக்கெதிரான சர்வதேச உட்பூசல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியும் அதற்கெதிராகவும் தனது அதிகாரத்தைப் பிரயோகித்தார் மைத்திரி.

ஏப்ரல் 21 இல் திட்டமிட்ட குண்டுத்தாக்குதல் நடந்து 250க்கும் அதிகமான அப்பாவி உயிர்கள் பலியாகின்றன.

குண்டுத்தாக்குதல் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்டது உறுதியானதும் சர்வதேச தீவிரவாத அமைப்பான IS அதைப் பொறுப்பேற்கிறது. Narcoterrorism இல் உச்சத்திலிருக்கும் பணக்கார தீவிரவாத அமைப்பே IS. ஆப்கான் பாகிஸ்தான் ஈரான் பிராந்தியத்திலிருந்து உற்பத்தியாகும் போதைப் பொருளானது IS மற்றும் தலிபான்கள் ஊடாகவே விநியோகிக்கப்படுகிறது. தலிபான் IS என்பன யாரால் உருவாக்கப்பட்டன என்பதை வைத்தும் தான் இதன் பின்னனி அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.

டிசெம்பர் 31 இல் தெகிவளையில் கைப்பற்றப்பட்ட கொகைன் ஆப்கானிலிருந்து பாகிஸ்தான் ஊடாக கொண்டுவரப்பட்டதும் அதனோடு இரண்டு பங்காளிகள் கைதானதும் உறுதி செய்யப்பட்ட செய்தி. ஒரு மாபியா கோட்பாதரால் தீவிரவாதம் வரை கையாள முடியுமா என்றால் பப்லோ எஸ்கபார் முதல் தாவூத் இப்றாகிம் வரை நடந்த கதை இது.
ஆனால் கேள்வி மதுசா உண்மையான கோட்பாதர்? என்பது.

போதைப்பொருள் கடத்தல் வியாபார குற்றவாளிகளுக்கெதிரான மரண தண்டனை கொடுக்கும் விடையத்தில் உறுதியோடு இருக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கெதிராய் தற்போது கிளம்பியிருக்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்களும் உலக கோர்ப்ரேட்களின் pay roll இலிருக்கும் சர்வதேச NGO க்களும்.

Drug trafficking க்கு எதிரான ஜனாதிபதியின் நடவடிக்கைகள் Ultimate ஆக பாதிப்பது எதை?

Drug trafficking முக்கிய இடங்களாக கூறப்படும் golden triangle(மியன்மார்-தாய்லாந்து- வியட்னாம்) க்கும் golden crescent(ஆப்கான்-பாகிஸ்தான்- ஈரான்) க்கும் இடையிலிருக்கும்
விட்டுக் கொடுக்க முடியாத Hub ஆன இலங்கையை வைத்து மாபியாக்களும் அவர்களின் முதலாளிகளும் கைவசம் வைத்திருந்த Proposal கள் தான் கேள்விக்குள்ளாகும். இந்தப் புள்ளியிருந்து தான் Virgin முதலாளி ரிச்சட் மூக்கு வேர்த்து ஜனாதிபதிக்கு அறிவுரை கூறக் கிளம்பியதையும் பார்க்க வேண்டும். அது மனித உரிமைப் புடலங்காய் என நினைப்பவர் லைசன் எடுத்த முட்டாளன்றி வேறில்லை.
ஜனாதிபதியின் இந்த முடிவானது சீனா மற்றும் தென்கிழக்காசிய மாபிய டான்கள் வரை Negotiation இல் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தியிருக்கும்.

அதனாலேயே ஏகாதிபத்தியத்தின் மறைமுகமான இந்த மாபிய Organizers இன் payroll இல் இருக்கும் மீடியாக்களும் அமைப்புக்களும் ஐரோப்பிய யூனியன் வரை மனித உரிமை என்று கொடி பிடிக்கின்றன.

இவற்றின் மூலம் ஜனாதிபதி வெளிப்படுத்தியிருப்பது மதுஸ் அல்ல இலங்கையிருக்கும் கோட்பாதர் என்பதும் மதுஸ் இப்பிராந்தியத்தின் வெறும் sales rep மட்டுமே எனும் உண்மையையும் தான்.

அப்படியெனில் முகம் மறைத்திருக்கும் அந்த கெளரவமான கோட்பாதர் யார்?

நாளாந்த செய்திகளை நன்கு கவனித்தால் புரியும்.

Web Design by The Design Lanka