மஹிந்த‌ எவ்வாறு பொது எதிரியானார்? » Sri Lanka Muslim

மஹிந்த‌ எவ்வாறு பொது எதிரியானார்?

mahin

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Saboor adem


கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த பலருக்கு பொது எதிரியாக நிறுத்தப்பட்டு சர்வதேச துணையுடன் அவர் தோற்கடிக்கப்பட்டார். மஹிந்த‌ எவ்வாறு பொது எதிரியானார் எனும் தேடலில்தான் மிகப் பெரும் அரசியல் நுனுக்கம் புதைந்துள்ளது.

யாருடைய இருப்பு, வளர்ச்சி போன்றவைகளுக்கு மஹிந்த தடையாக இருந்தாரோ அவர்களை எல்லாம் ஒன்று திரட்டி மஹிந்தவை போது எதிரியாக்கி தேர்தலில் தோற்கடித்து ஆட்சியை ரனிலிடம் கொடுத்தது சர்வதேசம். ஒன்று திரட்டப்பட்டவர்களை மிகவும் கவனமாக ரனில் ஆரசாங்கம் கையாண்டிருக்க வேண்டும். அது நடக்க வில்லை.

சம்பந்தன், ஹக்கீம் போன்றோர் மிகவும் சாதூரியமாக தங்களுடைய கட்சிகளை தங்களுடைய ஆளுகைக்குள் கையகப் படுத்திக் கொண்டனர். மஹிந்தரின் ஆட்சி தொடர்ந்திருக்குமானால் இரு சிறுபான்மை கட்சிகளும் இருந்த இடம் தடம் தெரியாமல் சிதறியிருக்கும்.

ஆனால் ரனில் ஓர் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்கின்றார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு மஹிந்த பொது எதிராக கட்டமைக்கப் பட்டாரோ அவ்வாறு தானும் தன்னை மாற்றிவிடக் கூடாது என்பதில் மிகவும் கரிசனையுடன் செயற்படுகின்றார்.

கடந்த தேர்தலைப் போன்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரி என்று யாருமே இருக்கப் போவதில்லை. சிறுபான்மையினருக்கு மிகவும் ஓர் சவாலான தேர்தலாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மொத்தத்தில் இலங்கை ஓர் மாற்று ஆரசியலை வேண்டி நிற்பதை யாரும் மறுத்திவிடவும் முடியாது!!

Web Design by The Design Lanka