ஏறாவூர் சவுக்கடி கடற்கரையின் மணற்பரப்பில் வாசிப்பு வட்டம் ஏறாவூர் இன் பதினாறாவது அமர்வு » Sri Lanka Muslim

ஏறாவூர் சவுக்கடி கடற்கரையின் மணற்பரப்பில் வாசிப்பு வட்டம் ஏறாவூர் இன் பதினாறாவது அமர்வு

37559790_10211858309319689_3287300099285188608_n

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கடந்த சனிக்கிழமை மாலை ஏறாவூர் சவுக்கடி கடற்கரையின் மணற்பரப்பில் வாசிப்பு வட்டம் ஏறாவூர் இன் பதினாறாவது அமர்வு இடம்பெற்றது. பேராசிரியர் கவிஞர் எம்.ஏ.நுஃமான் இவ்வமர்வின் பிரதான உரையாடலை நிகழ்த்தினார். இலக்கியம் தாண்டியும் பலதும் பத்துமாக சுவாரஷ்யமாக கதைப்போக்கு அமைந்திருந்தது. சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கான காரணங்கள், அதிலிருந்து மீள்வதற்கான வழிகள், சமகால ஈழத்து இலக்கியப் படைப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் இலக்கிய அரசியல் என உரையாடல் விரிவடைந்து சென்றது.

அலைகளின் இசையுடன் ஜமால்தீனின் பாடல்களும் அற்புதமாய் அமைந்திருந்தது. எஸ்.எல்.எம்மின் ஹாஷ்யத்துக்கும் பஞ்சமிருக்கவில்லை.

அதிளவான தோழர்கள் கலந்து கொண்டமை மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. கொங்கிரீட்களும், வாகன இரைச்சல்களும் தலையிடியைத் தந்துகொண்டிருக்கும் மோசமான இவ்வாழ்வியலில் இவ்வாறான இயற்கையான இடத்தில் காற்றோட்டத்துடன் எல்லா வயதினரும் கலந்து உரையாடுவது ஒரு வகையான அலாதியைத்தான் தருகிறது.

இவ்வமர்வுக்கு ஒத்துழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் மிகுந்த நன்றி. குறிப்பாக முன்னால் வலயக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெயினுதீன் சேர், Ismail Mihlar, Jemsith Raafi, Riyas Dawood, Akber Hassan, Munas Zamaan, Nazeem, ஒளிப்பதிவு செய்த Abdul Wajith, காத்தான்குடியிலிருந்து வருகை தந்த முஹம்மட், கல்குடாவைச் சேர்ந்த கவிஞர் நளீம், ஒவியர் ஸஜ்ஜாத் மற்றும் பாடகர் ஜமால்தீன் உட்பட கலந்து கொண்ட எல்லோருக்கும் பெரும் நன்றிகள்.

இக்காத்திரமான அமர்வை ஒழுங்கமைத்துத் தந்த Slm Hanifa க்கு நன்றிகளும் பிரார்த்தனைகளும். சிரமத்துக்கு மத்தியில் மணலில் அமர்ந்திருந்து கதைபேசிய நுஃமான் சேருக்கும் பிரார்த்தனைகள்.

தொடர்ந்து பயணிப்போம் தோழர்களே.

37710478_10211858306159610_245839547156398080_n

37661450_10211858304559570_5661848386073001984_n

37559790_10211858309319689_3287300099285188608_n

37621883_10211858304839577_8750652869511741440_n

Web Design by The Design Lanka